பாரம்பரிய மணத்துடன் நெய் சோறு செய்வது எப்படி?

Fragrant ghee rice
Ghee rice with fragrance
Published on

பாய் வீட்டு நெய் சோறு

பாய் வீட்டு நெய் சோறு மிகவும் எளிமையான, மணமும் சுவையும் நிறைந்த ஒரு பாரம்பரிய உணவு. இதை செய்ய...

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்

தண்ணீர் – 2 கப்

நெய் – 2 முதல் 3 மேசைக்கரண்டி

உப்பு – தேவைக்கு

மிளகு – ½ தேக்கரண்டி

ஜீரகம் – ½ தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை 2 முதல் 3 முறை நன்றாகக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். இதனால் சோறு மென்மையாக வரும். ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடாக்கவும். விருப்பம் இருந்தால் மிளகு + ஜீரகம் லேசாக வதக்கலாம். ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து நெயில் போட்டு 2 நிமிடம் நன்றாக வறுக்கவும். இதனால் சோறு ஒவ்வொரு தானியமாகவும் மணமாகவும் இருக்கும். இப்போது 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பை சேர்க்கவும். கொதிக்கத் தொடங்கியதும் தீயை குறைத்து மூடி வேகவிடவும். தண்ணீர் முழுவதும் இறுகி, அரிசி மென்மையாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும். இன்னும் சூடு இருக்கும் போதே 1 தேக்கரண்டி நெய் மேலே ஊற்றினால் சுவை இரட்டிப்பு.

பாய் வீட்டு நெய் சோறு சாதாரணமாக மோர் கறி, கத்தரிக்காய் குழம்பு, பருப்பு குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் மிகச் சுவையாக இருக்கும்.

நெய் சோறுக்கு பொருத்தமான இரண்டு சைடிஷ் ரெசிபி...

மோர் குழம்பு (Kerala Style)

நெய் சோற்றுக்கு மிகவும் பொருத்தமான, லேசான, நெய் சுவையை உயர்த்தும் கறி. இதை செய்ய

தேவையான பொருட்கள்

மோர் – 2 கப்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

தேங்காய் – ¼ கப்

ஜீரகம் – ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை – சில

கடுகு – ½ தேக்கரண்டி

எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

தேங்காய் + ஜீரகம் + பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த விழுது + மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அடுப்பை குறைத்து மோர் + உப்பு சேர்த்து வெதுவெதுப்பாக ஆக்கவும். கொதிக்க விடக்கூடாது. வெதுவெதுப்பாக இருந்தால் போதும்.

இதையும் படியுங்கள்:
நறுமணம் பரப்பும் ரம்பா இலை சாதம் மற்றும் சுவையான இனிப்பு சேவு ரெசிபிகள்!
Fragrant ghee rice

கத்தரிக்காய் குடை மிளகாய் கறி

நெய் சோற்றின் மணத்தை இன்னும் உயர்த்தும் சுவையான கறி. இதை செய்ய

தேவையான பொருட்கள்;

கத்தரிக்காய் – 4 (நறுக்கியது)

குடை மிளகாய் – 1

வெங்காயம் – 1

தக்காளி – 1

மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி

தனியா தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை

செய்முறை:

எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்து வதக்கிவிடவும். மசாலா தூள்கள் அனைத்தும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். கத்தரிக்காய் + குடை மிளகாய் சேர்த்து மூடி 10 முதல் 12 நிமிடம் வேகவிடவும். எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
வீடே மணக்கும் அசத்தல் கத்தரிக்காய் மசாலா: சட்டுனு செய்யக்கூடிய செய்முறை! 
Fragrant ghee rice

நெய் சோறு என்பது எளிய உணவு என்றாலும், அதில் இருக்கும் மணமும் மென்மையும் அதை ஒரு சிறப்பான பாரம்பரிய உணவாக மாற்றுகிறது. இந்த நெய் சோற்றுடன் சேர்த்து பரிமாறப்படும் மோர் குழம்பு, , கத்தரிக்காய் கறி, போன்ற சைடிஷ்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையான சுவையை வழங்கி முழு உணவையும் சிறப்பாக்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com