குழந்தைகள் விரும்பும் சில நெல்லிக்காய் ஸ்வீட் ரெசிபிகள்! 

Nellikai Sweet
Nellikai Sweet
Published on

இனிப்புகள் என்றாலே அனைவருக்குமே பிடிக்கும். அதுவும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள்.  ஆனால், சந்தையில் கிடைக்கும் இனிப்பு வகைகளில் அதிகமாக சர்க்கரை சேர்க்கப்படுவதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதற்கு மாற்றாக குழந்தைகளுக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் இனிப்பு தயாரித்து கொடுப்பது நல்லது. நெல்லிக்காயில் விட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவும். இந்தப் பதிவில் நெல்லிக்காயைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான இனிப்பு வகைகளை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

நெல்லிக்காய் மிட்டாய்: 

நெல்லிக்காய் மிட்டாய் செய்வதற்கு நெல்லிக்காய், வெல்லம், இஞ்சி, சோள மாவு இருந்தால் போதும்.‌ முதலில் நெல்லிக்காயை வேகவைத்து தோல் மற்றும் கொட்டையை நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்னர், இஞ்சியை துருவி வெல்லத்தை பொடி செய்து கொள்ளுங்கள். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சோள மாவு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும். இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தால், நெல்லிக்காய் மிட்டாய் தயார். 

நெல்லிக்காய் ஜாம்: நெல்லிக்காய், வெல்லம், இலவங்கப்பட்டை, ஏலக்காய் பயன்படுத்தி நெல்லிக்காய் ஜாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். முதலில் நெல்லிக்காயை நன்கு வேகவைத்து அதன் சதைப்பற்றை எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை கடாயில் சேர்த்து வெல்லம் லவங்கப்பட்டை ஏலக்காய் போட்டு மிதமான தீயில் திக்கான பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். 

இதையும் படியுங்கள்:
நெல்லிக்காய் பயன்படுத்தி சட்னி செய்யலாமா? புதுசா இருக்கே!
Nellikai Sweet

நெல்லிக்காய் சாஸ்: நெல்லிக்காய் சாஸ் தயாரிப்பது மிகவும் எளிது. நெல்லிக்காய், வெல்லம், உப்பு, மிளகாய் தூள் இருந்தாலே போதும். மேலே குறிப்பிட்டது போல நெல்லிக்காயை அரைத்து விழுதாக்கி அதில் வெல்லம், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் கிளறினால் நெல்லிக்காய் சாஸ் தயார். 

நெல்லிக்காய் ஜூஸ்: நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்க நெல்லிக்காயை வேகவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சுவைக்காக தேன் கலந்து நன்றாகக் கலக்கி வடிகட்டினால், நெல்லிக்காய் ஜூஸ் தயார். 

இதையும் படியுங்கள்:
பசியில் பறக்கும் ருசியான இனிப்பு பணியாரம் வகைகள்..!
Nellikai Sweet

மேலே, குறிப்பிட்ட நெல்லிக்காய் இனிப்பு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அவர்களது வயதுக்கு ஏற்ப எவ்வளவு நெல்லிக்காய் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். சிறிய குழந்தைகளுக்கு நெல்லிக்காயை நன்றாக அரைத்து கொடுக்க வேண்டும். நெல்லிக்காயின் புளிப்பு சுவை சில குழந்தைகளுக்கு பிடிக்காது. எனவே வெல்லம், தேன் போன்றவற்றை சேர்த்துக் கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக ஸ்வீட் செய்து கொடுக்காமல், வெவ்வேறு முறையில் அவற்றை தயாரித்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com