தேங்காய்ப் பால் சுவையுடன்: பச்சை பட்டாணி புலாவ் எளிய செய்முறை!

Coconut milk flavor
Green Pea Pulao recipes
Published on

பச்சை பட்டாணி புலாவ்

தேவை: 

பாஸ்மதி ரைஸ் - 1/2 கிலோ, வெங்காயம் - 1 

தக்காளி - 1

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், 

பச்சை மிளகாய் - 4, 

தக்காளி - 4, 

பட்டாணி - ஒரு கைப்பிடி, வெந்தயக்கீரை - ஒரு கப் 

தேங்காய் பால் - 1 கப், 

நெய் - 1 டீஸ்பூன், 

சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - 2, 

கிராம்பு - 4, 

சோம்பு - 1/2 டீஸ்பூன், ஏலக்காய் - 2, 

அன்னாசி பூ - 1, 

பிரியாணி இலை - 3,

செய்முறை:

வெங்காயம், தக்காளி, வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் பட்டாணியையும் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை பட்டாணியாக இருந்தால் புலாவ் செய்வதற்கு ஒரு மணிநேரம் முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்து சுடுதண்ணீரில் ஊறவைத்தால் போதுமானது. பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை முழுதாக அப்படியே சேர்க்க வேண்டும். கீரை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, லேசாக உப்பு போட்டு வதக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சத்து நிறைந்த கம்பு உருண்டை, பாகு நிறைந்த பாதாம் பூரி!
Coconut milk flavor

இவைகள் அனைத்தும் நன்கு சுருள வதங்கி வந்ததும், பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறி விடவேண்டும். பின்னர் தேங்காய் பால் சேர்த்துகொள்ள வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றவேண்டும். ஆனால் இதில் தேங்காய் பால் சேர்த்து உள்ளதால், ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்தால் போதும். உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடிவைத்து இரண்டே விசில் விட்டால்போதும், அற்புதமான வாசனையில், ஆரோக்கியமான வெந்தயக்கீரை பச்சை பட்டாணி புலாவ் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com