கேரட் மைசூர்பா சாப்பிட்டு இருக்கிறீர்களா?

கேரட் மைசூர்பா சாப்பிட்டு இருக்கிறீர்களா?

- பவ்யா வேணுகோபால்

தேவையானவை :

1/2 கிலோ - இனிப்பான கேரட்,

300 கிராம் - சர்க்கரை,

100கிராம் - கார்ன் மாவு,

2 tbs - நெய்,

முந்திரி - 2 tbs,

சீவிய பாதாம் & பிஸ்தா - 2 tbs,

டெசிகேட்டட் தேங்காய் துருவல் - 150 கிராம்,

உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை :

ஒரு பிரஷர் குக்கரில் நன்கு கழுவி நறுக்கிய கேரட்டை போட்டு வேகவைக்கவும்.

2 விசில்கள் அல்லது கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை சமைக்கவும்.

இதை முழுமையாக ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி மென்மையாக நெய் போன்ற பேஸ்டாக அரைக்கவும்.

பின்பு இதை ஒரு வடிகட்டியில் போட்டு அரைத்த கேரட்டில் பிசிறுகள் இல்லாது ஒரு ஸ்பூனால் தேய்த்து வடிகட்டவும்.

இதில் சர்க்கரை, கார்ன் மாவு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கூழ் போல அரைக்கவும். இந்தக் கலவையை ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து அரைத்த கலவையை அதில் ஊற்றி தொடர்ந்து கிளறவும்,

தீயை நடுத்தரமாக வைக்கவும்.5 நிமிடங்களுக்குப் பிறகு, கலவை கெட்டியாகி வழுவழுப்பாக தெரியத் தொடங்கும்.

இப்போது 2 tbs நெய் சேர்த்து தொடர்ந்து கிளறவும் .

இதை தொடர்ந்து கிளற வாணலியில் ஒட்டாது அல்வா போல கலவை திரண்டு வந்ததும் இந்தக் கலவையை ஒரு செவ்வகக் கிண்ணத்தில் பட்டர் பேப்பர் விரித்து அதில் சீவிய முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகளில் பாதியை பரப்பி அதன் மீது கிளறிய கலவையை கொட்டவும்.

இதை சமன்ப்படுத்தி மீதியுள்ள முந்திரி பாதாம் பிஸ்தா துருவல்களை மேற்புறம் தூவி அழுத்தி சமப்படுத்தி பேப்பரை நன்கு மடித்து மூடி 1 மணி நேரம் ஆற விட்டு பின்பு பேப்பரை நீக்கவும்.

உங்களுக்கு.விருப்பமான வடிவில் செய்து கொள்ளலாம். டெஸிகேட்டட் தேங்காய் துருவல் மீது பிரட்டவும் .

சூடான சுவையான அற்புதமான கேரட் மைசூர்பா ரெடி. மைசூர்பா போன்ற மென்மையும் காரட், முந்திரி, பாதாம் பருப்புகளின் ருசியும் இணைந்த அருமையான இனிப்பு வகை.

ஐஸ்க்ரீம் ஸ்கூப் உடன் இதை பரிமாற சுவை அட்டகாசமாக இருக்கும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com