
மிகவும் பிரபலம் அடைந்த நெல் வகைகளில் கர்நாடக மாநிலத்தில் பயிரிடப்படும் மைசூர் மல்லியாகும். அக்காலத்தில் மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்ட ரகம். இதில் சாதம் தயாரிக்க தும்பைப் பூ போல் இருக்கும்
இதன் நன்மைகள்
மைசூர் மல்லி மிகுந்த மருத்துவகுணம் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. . இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
எளிதில் ஜீரணம் அடையக்கூடியது. இதை எவ்வித பயமுமின்றி உண்ணலாம். செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஏற்ற அரிசி.
இது எளிதில் ஜீரணம் அடையும் தன்மை கொண்டதால் இதை குழந்தைகளுக்கு உணவாக அளிக்கலாம். அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
அனைத்து பலகாரங்கள் உனக்கும் ஏற்றது. இதன் பழைய நீராகாரம் சுவையானது. ஆரோக்கியமானது.
பீட் பட்டர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
இதில் வைட்டமின் பி6, மக்னீசியம் பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் உள்ளது. ஊட்டச்சத்து நிறை மூலம் இதயம் ஆரோக்கியமாகும்.
உடல் எடையைக் குறைக்க இது உதவுவதாக தெரிகிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதை உண்ணலாம். பெண்கள் இதை சாப்பிடுவதாலு மார்பக புற்று தடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
கணிணி, லேப்டாப் மற்றும் செல்ஃபோனை அதிகம் பயன்படுத்துவதால் கண் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க பீட் பட்டர் சாப்பிடுவது நல்லது. இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் செரிமானப் பிரச்னை நீக்கப்படுகிறது.
சிறுநீரகக்கல் பிரச்னையை தீர்க்கும் குணம் வேர்க்கடலையில் உள்ளது. பீட் பட்டர் வேர்க் கடலையிலிருந்து தயாரிக்கப்படுவதால் இதை சாப்பிடுவதால் சிறுநீரககல் பிரச்னை குறையும்.
காலை வெறும் வயிற்றில் வெந்தய டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்;
மிக முக்கியமாக செரிமான சக்தி சீராகிறது. கரையக் கூடிய நார்சத்து இதில் உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கிறது. உணவுப்பாதையை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் சிலருக்கு வயிற்று உப்புசம் ,வலி போன்றவற்றைத் தடுக்கிறது.
உடலின் எடையைக் குறைத்து மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. உணவு விரைவாக செரிமானம் ஆவதால் கலோரிகள் குறைக்கப்பட்டு மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடைக் குறைய மெந்தயடீ மிகச்சிறந்தது.
இந்த டீயை அருந்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நன்மைகள் உண்டு. உடல் இரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது. வெந்தயத்தில் உள்ள 4Hydrooxyisoleucine என்ற மூலக் கூறினால் சர்க்கரை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இந்த டீயை உட்கொள்வதன் மூலம் இயற்கை முறையில் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம்.
இது சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இதன் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் ஃப்ரீ ராடிகல்களின் பாதிப்பை கட்டுப்படுத்தும். இளமையாக உடலை வைக்கும். முகத்தில் பருக்கள் கரும் புள்ளிகள் ஏற்படாமல் வைக்கும். அரிப்பைத் போக்கும். இயற்கையான முறையில் தோலை ஆரோக்கியமாக இது வைக்கக்கூடியது.
இது இதய ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. ட்ரைக்ளிசரைடு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் பொடாசியம் உள்ளதால் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இதய சம்பந்த அனைத்து பிரச்னைகளையும் போக்கைக்கூடியது.
பாலூட்டும் தாய்மார்கள் இந்த டீயைக்குடிக்க பால் அதிகம் சுரக்கும். இந்த டீ சாப்பிடும் தாய்மார்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்பு இதில் உள்ளதால் உடல் வலி மற்றும் அழற்சி பிரச்னைகள் குணமாகும் மூட்டுக்களில் உள்ள வலி,தசைகளின் வலி போன்றவை தீரும் இதன் அழற்சி எதிர்ப்பினால் உடல்வலி அனைத்தும் குணமாகும்.
இரவு 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் ஒரு கப் நீரைக் கொதிக்கவைத்து அதில் ஊறிய வெந்தயத்தை சேர்த்து ஏழு நிமிடம் கொதித்த பிறகு அதை வடிகட்டி சாப்பிடலாம். சிறந்த ஆரோக்கியம் பெறலாம்.