கும்பளங்காயின் (Ash Gourd) ஆரோக்கிய நன்மைகள் – 5 சுவையான ரெசிபிக்கள்!

Health Benefits of Ash Gourd!
Ash Gourd
Published on

கும்பளங்காயின் நன்மைகள்

1 உடல் வெப்பத்தை குறைக்கும்

2 சிறுநீரகங்கள் மற்றும் கழிவுகள் நீக்க பண்புகளை மேம்படுத்துகிறது.

3 இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

4 கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

5 மன அழுத்தத்தைக் குறைத்து நெரிசலிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

5 உணவு வகைகள்

கும்பளங்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:

தோல் சீவி நறுக்கிய கும்பளங்காய் துண்டுகள் _ 1 கப்

துவரம்பருப்பு _1/2 கப்

தேங்காய் துருவல் _2 ஸ்பூன்

சீரகம் _1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் _2

மஞ்சள்தூள், உப்பு _ தேவையான அளவு

செய்முறை: துவரம்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். அத்துடன் கும்பளங்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பின்னர் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வேகவைத்த காயுடன் சேர்த்து சிறிது கிளறி இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
சுவையான ஆவாரம் பூ ரசம்- கத்தரி கிரேவி செய்யலாம் வாங்க!
Health Benefits of Ash Gourd!

கும்பளங்காய் மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:

கும்பளங்காய் துண்டுகள் _ 1 கப்

மோர் _1 கப்

பச்சை மிளகாய் _ 2

சீரகம் _1 ஸ்பூன்

மஞ்சள்தூள், உப்பு _தேவையான அளவு

தாளிக்க_ கடுகு, உளுத்தம்பருப்பு

செய்முறை: நறுக்கிய கும்பளங்காய் துண்டுகளை, மஞ்சள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் அரைத்து மோருடன் சேர்த்து விடவும். இந்த கலவையை சமைத்த கும்பளங்காயுடன் சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். (மோர் கொதிக்க விடக்கூடாது) கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

கும்பளங்காய் அல்வா

தேவையான பொருட்கள்:

கும்பளங்காய் தோல் சீவி துருவியது _1 கப்

பால் _1கப்

சர்க்கரை _1 கப்

நெய் _3 ஸ்பூன்

ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்

முந்திரி, திராட்சை தலா _10

செய்முறை: கும்பளங்காய் துருவலுடன் பாலை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். நன்றாக வெந்தப் பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும். கலவையுடன் நெய் சேர்த்து வெந்தப் பிறகு ஏலக்காய்தூள் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மேலே தூவி இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஈவினிங் ஸ்நாக்ஸ் நெய் கடலை மற்றும் சாக்லேட் சேமியா பர்ஃபி!
Health Benefits of Ash Gourd!

கும்பளங்காய் சூப்

தேவையான பொருட்கள்:

கும்பளங்காய் துண்டுகள் _1கப்

சின்ன வெங்காயம் _10

பூண்டு _2 பல்

மிளகுதூள், உப்பு _ தேவையான அளவு

மல்லித்தழை _ சிறிதளவு

செய்முறை: கும்பளங்காய் துண்டுகளை வெங்காயத்துடன் நீரில் வேகவைக்கவும். ஆறியதும் அதை மிக்ஸியில் அடித்து சாறு வடிகட்டவும். பின்னர் மிளகுதூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறலாம்.

கும்பளங்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

கும்பளங்காய் துண்டுகள் _1கப்

இஞ்சி _ சிறு துண்டு

எலுமிச்சை பழம் _1

தேன் _2 ஸ்பூன்

புதினா இலைகள் _5

உப்பு _1 சிட்டிகை

செய்முறை: கும்பளங்காய் துண்டுடன் இஞ்சி சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அந்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஊற்றி கொண்டு அதில் எலுமிச்சை சாறு, உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் ஆகிய பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும். கும்பளங்காய் ஜூஸ் தயார். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய பலன்களை பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com