
பெரும்பாலும் பூமியின் அடியில் விளையும் கிழங்குகளை சாப்பிடக்கூடாது என்பார்கள். உண்மையை சொல்லப் போனால் எல்லா கிழங்குகளுமே கெடுதல் கிடையாது. ஆற்றல் மிக்க சாப்பிட வேண்டிய கிழங்குகளும் சில உள்ளன. அவற்றை பார்ப்போம்.
கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. ஸ்டார்ச் அதிகம் உள்ள இந்தக் கிழங்கு, ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை கெட்டுப் போகாது என்பது இதன் சிறப்பு. இது பல அழற்சி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக மூட்டுவலி, பெருங்குடல் அழற்சி போன்ற அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிக்கல்களைக் குறைக்கும். இதிலுள்ள குர்செடின் எனப்படும் வேதிப்பொருள் கல்லீரல் செயல்பாடுகளை பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிக அதிகளவில் உள்ளன. எனவே, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
கிழக்கு வகைகளில் மிகவும் சிறந்ததாக கருதப்படுவது கருணைக் கிழங்கு தான். மலக்குடல் பலம் பெறும். கருணைக் கிழக்கு மூல வியாதிக்கு மருந்தாகும். மண்ணீரல், கல்லீரலுக்கு இது வலுச் சேர்க்கிறது. அடிக்கடி சாப்பிட்டால் உடலில் உஷ்ணம் ஏறாது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த கிழங்கை சாப்பிட மலக்குடல் பகுதியில் வரும் புண்களை ஆற்றுகிறது. 40 நாட்களில் உள் மூலம், வெளி மூலம் சரியாகிறது. கருணைக் கிழங்கை புளி சேர்த்தே சமைக்க வேண்டும். காபி பிரியர்களின் பித்தக் கோளாறுகளை சரி செய்கிறது. இதனால் அனைத்து மாதவிடாய் பிரச்சனைகளும் சரியாகும்.
ருசி மற்றும் ஆரோக்கியம் இரண்டுமே கலந்தது தான் சர்க்கரைவள்ளி கிழங்கு. இதிலுள்ள மாவுப்பொருள்தான் இனிப்பு சுவையை தருகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த கிழங்கை சாப்பிட உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அனைத்து வகையான காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன இதில் வைட்டமின் ஏ, பி, டி ,இரும்பு சத்து, பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் இருப்பதாகவும் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவை உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. உடல் எடை குறைய, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, சுவாச பிரச்சினை தீர, மூட்டுவலி பிரச்சினை தீர, வயிற்றுப்புண் சரியாக, இதை பரிந்துரை செய்வார்கள். புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் எந்தவிதமான தீங்கும் ஏற்படுவதில்லை. அவற்றை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிறார்கள் தி ஜர்னல் ஆப் நீயூட்ரிஷர்ஸ். உருளைக்கிழங்கில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. அதேவேளையில் ஒரு நாளைக்கு தேவையான அளவில் 8 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளது. எனவே, தினமும் குழந்தைகள் உணவில் அது இடம்பெற வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உருளைக்கிழங்கில் இருக்கும் ஆக்ஸிடென்ட்கள் உடலுக்கு அதிக நன்மைகள் செய்கிறது. இவை உடலிலுள்ள செல்கள் சிதைவை வெகுவாக குறைத்து செல்களின் நீண்ட ஆயுளுக்கு உதவுகிறது என்கிறார்கள். அரிசியை விட இதில் சத்து அதிகம். இரும்பு மற்றும் புரதச்சத்துகள் இதில் உள்ளன.
இதில் 4 வகை இருந்தாலும் பயன்தரக்கூடிய விதத்தில் எல்லாமே ஒன்று தான். வைட்டமின் ஏ, பி, இரும்பு, புரதச்சத்துகள் இதில் அடங்கியுள்ளது. ஆண்மை குறைபாடு போக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியையும் நீக்கும். உடல் சூடு தணியும், இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. அதேபோல ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் சி மற்றும் விட்டமின் இ போன்ற சத்துக்களும் உள்ளன. இது நம் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது.
கீரைகளைப் போலவே கிழங்கு வகைகளிலும் வைட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்து இருக்கின்றன. அவ்வகையில், மரவள்ளிக் கிழங்கில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன. இதனை ஆழ் வள்ளி கிழங்கு, ஏழில் கிழங்கு என்றும் கூறுவார்கள். கால்சியம், கலோரிகள், புரதங்கள், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்பு, தியாமின், ஃபோலேட், வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் கிழங்கு .
சிறு கிழக்குக்கு சீமக்கிழங்கு, கூர்கா கிழங்கு, சிவக்கிழங்கு என வேறு சில பெயர்களும் உண்டு. இதனை சிறு வள்ளிக் கிழங்கு என்பர். மேலும் ஆங்கிலத்தில் இதை சைனீஸ் போட்டோ என்கிறார்கள். அஸ்கார்பிக் அமிலம் நிறைய உள்ளதால் வைட்டமின் சி பற்றாக்குறை சார்ந்த பிரச்னைகள் சிறு கிழங்கு உண்பதால் தவிர்க்கபபடுகின்றன. அதிக அளவு கார்போஹைட்ரேட்டும், புரதச்சத்தும், நிறைய ஊட்டச்சத்துக்களும் உடைய இது. அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்றது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியது. பார்வை கோளாறுகளை விரட்டக் கூடியது. இதிலுள்ள பொட்டாசியம் இரத்த உறைதலை சரி செய்கிறது. மேலும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.