கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு கொடுங்க: சுவையான கீரை தொக்கு செய்முறை!

சத்துக்கள் நிறைந்த கீரையை குழந்தைகள் மிச்சம் வைக்காமல் ரசித்து சாப்பிட வைக்கும் எளிய வீட்டு சமையல் ரகசியம்.
கீரை தொக்கு
கீரை தொக்குAI image
Updated on

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய கீரை தொக்கு பயன்கள்

கீரை வகைகள் என்றாலே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருளாகும். பல நன்மைகள் கீரையில் இருந்த போதிலும் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. இவ்வாறு கீரை தொக்கு செய்து கொடுப்பதன் மூலம் அதை உணவில் சேர்த்து சாப்பிட்டு விடுவார்கள்.

மேலும் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கீரை மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருளாகும். தினசரி உணவில் கீரையை சேர்ப்பது உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் தரவல்லது. கீரையில் பலவிதமான நன்மைகள் உள்ளன. அதிகளவு இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

மேலும் தினசரி உணவில் கீரையை சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்னையைக் போக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரத்த சோகையைக் குறைக்கிறது. கீரையில் வைட்டமின் ஏ, சி, இ, கே மற்றும் கால்சியம் தாதுக்கள் நிறைந்துள்ளன.

கீரை தொக்கு
கீரை தொக்குAI image

மேலும் உடல் எடைக் குறைக்க விரும்புபவர்கள் கீரையை உட்கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது. அன்றாட வாழ்வில் நாம் கீரையைக் கடையல், கூட்டு இது மாதிரிதான் செய்து சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக கீரையில் தொக்கு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கீரை - 500 கிராம் (தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு கீரை வகையை எடுத்துக் கொள்ளலாம்)

பெரிய வெங்காயம் தேவையான அளவு

வெள்ளைப் பூண்டு - தேவையான அளவு

மிளகாய் தூள் - தேவையான அளவு

மஞ்சள் தூள் - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

புளி - தேவையான அளவு

கடுகு - 1 ஸ்பூன்

சிறுஞ்சீரகம் - 1 ஸ்பூன்

மிளகாய் வத்தல் - 5

நல்லெண்ணெய் - தேவையான அளவு

குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் கீரை தொக்கு செய்யும் முறை

ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். சிறிதளவு புளியை கழுவி நீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சிறுஞ்சீரகம், வத்தல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொரிந்து வந்தவுடன் தங்களுக்குப் பிடித்தமான கீரையை சுத்தம் செய்து நறுக்கி வாணலியில் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். நாம் மிக்ஸியில் அறைத்து வைத்திருந்த கலவையையும் சேர்த்து நன்கு கிளரி கொடுக்க வேண்டும் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் நாம் கரைத்து வைத்திருந்த புளி கரைசலையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கிக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சலிப்பூட்டும் சாம்பாருக்கு குட்-பை! ஆந்திரா ஸ்டைல் 'பரங்கிக்காய் பால் கூட்டு' ரகசியம் இதோ!
கீரை தொக்கு

சுடு சாதத்திற்கு ஏற்ற அசத்தலான கீரை தொக்கு சமையல் குறிப்பு

சுவையான கமகமக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கீரை தொக்கு தயார். இதை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது மிகுந்த சுவையுடையதாக இருக்கும். சத்துக்கள் நிறைந்துள்ள பல உணவுகளை குழந்தைகள் விரும்பி உண்ணாத போதிலும் நாம் அதை புதுவிதமான சுவையில் சமைத்துக் கொடுப்பதன் மூலம் அவற்றை விரும்பி உண்பார்கள்.

வளரும் குழந்தைகளின் அன்றாட உணவில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களை முழுமையாகச் சேர்த்து, அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பன்மடங்கு அதிகரிக்கலாம். கீரையை வேண்டாம் என்று ஒதுக்கும் குழந்தைகளையும் தட்டே காலியாகும் அளவிற்கு ரசித்து ருசித்து சாப்பிட வைக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com