

பரங்கிக்காயை கூட்டு போல்தான் வைத்து சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக பரங்கிக்காயை சாதத்தில் சேர்த்து சாப்பிடுவதுபோல பரங்கிக்காய் பால் கூட்டு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
உடலுக்குக் குளிர்ச்சி தரும் பரங்கிக்காய் கூட்டு நன்மைகள்
இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும். மேலும் பரங்கிக்காயில் (மஞ்சள் பூசணி) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக பரங்கிக்காய் உள்ளது. இது பல எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ளது. இது உடலின் செரிமானத்தை மேம்படுத்தி சிறுநீரகக் கற்களைக் கரைக்கக் உதவுகிறது.
மேலும் பரங்கிக்காய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பரங்கிக்காய் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
பரங்கிக்காய் அல்சரை குணப்படுத்த உதவுகிறது. பல நன்மைகளைக் கொண்டுள்ள பரங்கிக்காயில் பரங்கிக்காய் பால் கூட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் பரங்கிக்காய் கூட்டு செய்யத் தேவையான பொருட்கள்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
வெங்காயம் - 3
தக்காளி - 4
மஞ்சள் பூசணி - 500 கிராம்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 1
பசும்பால் - ஒரு கிண்ணம் அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
சுவையான ஆந்திரா ஸ்பெஷல் பரங்கிக்காய் கூட்டு செய்முறை விளக்கம்
பரங்கிக்காயை (மஞ்சள் பூசணி) நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து நன்கு பொறிந்த உடன் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம், தக்காளி சிறிது சிறிதாக நறுக்கி இதனுடன் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் நாம் நறுக்கி வைத்திருந்த பரங்கிக்காய் (மஞ்சள் பூசணி) சேர்த்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிகொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை அரைத்து அதனுடைய பாலை எடுத்து இரண்டாவதாக எடுத்த பாலை பறங்கிக்காய் கூட்டு உடன் சேர்த்து வேகவைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய், சீரகம் தேவையான அளவு நீர் விட்டு மென்மையாக அரைத்து பரங்கிக்காய் கூட்டு உடன் கலந்து இரண்டு நிமிடங்கள் கிளறிக்கொடுக்க வேண்டும். இதனுடன் தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட முதல் பாலையும் தேவையான அளவு பசும்பால் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக மல்லித்தழை சிறிது சிறிதாக கட் செய்து பரங்கிக்காய் பால் கூட்டின் மீது போட்டு இறக்க வேண்டும்.
சுவையான கமகமக்கும் ஆந்திரா ஸ்பெஷல் பரங்கிக்காய் பால் கூட்டு தயார். இதை சாதத்துடன் மெயின் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். காய்கறிகளில் பல நல்ல சத்துக்களை கொண்ட காய்கறிகளை குழந்தைகள் விரும்புவதில்லை. ஆனால் இவ்வாறு புதுவிதமாக சமைத்துக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனை விரும்பி உண்பார்கள். நான் அன்றாட செய்வதை காட்டிலும் இவ்வாறு பசும்பால் சேர்ப்பது இதன் சுவையை மேலும் அதிகரித்து கொடுக்கும்.