

தேவையான பொருட்கள்:
நறுக்கிய புரோக்கோலி ஃபுளோரெட்ஸ் 450 கிராம்
உலர் கிரான்பெரி ½ கப்
ரெட் ஆப்பிள் 1 (நறுக்கிக் கொள்ளவும்)
வெயிலில் உலர வைத்து எண்ணெயில் ஊறிய தக்காளி துண்டுகள் ¾ கப்.நறுக்கிய வால்நட் ½ கப்
சிவப்பு வெங்காயம் நறுக்கியது ½ கப்
ட்ரெஸ்ஸிங் செய்ய தேவையான பொருட்கள்:
கிரீக் யோகர்டு 1 கப்
மயோனைஸ் 2 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் சிடார் வினிகர் 2 டேபிள் ஸ்பூன்
டைஜோன் (Dijon) மஸ்டர்டு 1 டேபிள் ஸ்பூன்
தேன் அல்லது மாப்பிள் (maple) சிரப் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கருப்பு மிளகுத் தூள் ¾ டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் புரோக்கோலியை கையிலெடுத்து சாப்பிடும் அளவிலான துண்டுகளாக நறுக்கிப்போடவும். அதனுடன் உலர்ந்த கிரான்பெரி, ஆப்பிள் துண்டுகள், தக்காளி துண்டுகள், வால்நட் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
ஒரு சிறிய பௌலில் கிரீக் யோகர்ட், மயோனைஸ், ஆப்பிள் சிடார் வினிகர், டைஜோன் மஸ்டர்டு, தேன், உப்பு, மிளகுத் தூள் ஆகியவைகளை சேர்த்து பள பளப்புடன் கூடிய மிருதுத்தன்மை வரும் வரை நன்கு அடித்துக் (beaten) கலக்கவும்.
புரோக்கோலி கலவை மீது இந்த ட்ரெஸ்ஸிங் கலவையை ஊற்றி நன்கு குலுக்கிவிடவும். சாலட்டில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளே ட்ரெஸ்ஸிங் கலவையின் சுவை இறங்க, 15-20 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்துப் பிறகு பரிமாறவும்.
டிப்ஸ்:
புரோக்கோலியை சுலபமாக மெல்ல வேண்டுமானால், அதை கொதிக்கும் நீரில் போட்டெடுத்து, நீரை ஒட்டப் பிழிந்துவிட்டு சாலட்டில் சேர்க்கலாம். வால்நட் மற்றும் ஆப்பிள் துண்டுகள் கிரஞ்சியாக (crunchy) இருக்க வேண்டும் என்றால், சாலட்டை உட்கொள்ள ஆரம்பிக்கும்போது அவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
உலர் கிரான் பெரிகளுக்குப் பதில், உலர் ஆப்ரிகாட், ரைசின்களையும் சேர்க்கலாம். பதப்படுத்தி எண்ணெயில் ஊற வைத்த தக்காளித் துண்டுகளை, எண்ணெயைப் பிழிந்து எடுத்துவிட்டு சேர்க்க வேண்டும். இந்த சாலட்டை ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு மூன்று தினங்கள் வரை கூட உபயோகிக்கலாம்.