லஞ்ச் பாக்ஸிற்கு சத்தான உணவு, மதியத்திற்கு ஜில்லென்று ஒரு ஸ்வீட் - சிம்பிள் ரெசிபி!

dal-palak-oothappam
dal-palak-oothappam
Updated on

குழந்தைகளுக்கு சத்தான பருப்பும், கீரையும் நிறைந்த புரதச்சத்து உள்ள ஊத்தப்பம். இதில் பருப்பு பன்னீர் மற்றம் பாலக்கீரை சேர்க்கப்படுவதால் குழந்தைகளுக்கு புரதம், இரும்பு மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க ஏற்ற உணவு.

பருப்பு பாலக் ஊத்தப்பம்

தேவையானவை:

பயத்தம் பருப்பு. 1கப்

வேகவைத்த பாலக்கீரை அரை கப்

தயிர் இரண்டு டேபிள்ஸ்பூன்

பச்சைமிளகாய் 2

உப்பு

பன்னீர் அரை கப் பசித்தது

காரட் துருவல் 2டேபிள் ஸ்பூன்

வெங்காயம் பொடியாய் அரிந்து 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி பொடியாய் நறுக்கியது 2டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பயத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.‌ ஊறிய பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் வேகவைத்த பாலக்கீரை சேர்த்து நன்றாக அரைக்கவும். மிருதுவாக ஊத்தப்பம் இருக்க ஒரு சிட்டிகை ஈனோ உப்பு சேர்க்கலாம்.

அரைத்த விழுகின்ற மிளகாய் பொடி, தனியா பொடி, பெருங்காயம் சிறிது சேர்க்கவும்.

தோசைக்கல்ல சூடாக்கி அரைத்த மாவை ஊற்றவும் அதன்மீது பன்னீரா பொடித்த வெங்காயம் காரட் மற்றும் தக்காளி சேர்த்து பரத்தி வைத்து அதை இரண்டு பக்கமும் கோல்டன் நிறத்தில் வேகவைத்து எடுக்கவும். இது குழந்தைகளுக்கு மிக ஊட்டச்சத்து தரக்கூடியது.

இனிப்பு மிஷ்டி டோய் (பெங்காலி இனிப்பு)

உணவு உண்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது வழக்கம். இந்த மிஷ்டி டோய் ஒரு இனிப்பு தயிர் ஆகும். இதில் சர்க்கரையை கரையவைத்து ப்ரௌனாக ஆக்கி தயிரில் சேர்க்கப்படுகிறது. மேலும் இதற்கு பயன்படுத்தும் தயிரை நன்கு கட்டி அதிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு சேர்க்கப்படுகிறது.‌ இதை தயாரிக்க மண்பானை பயன்படுத்தினால் நல்லது.

மிஷ்டி டோய் தயாரிக்கும்போது நினைவில் வைக்க வேண்டியவை. இதற்கு பயன்படுத்தும் சீனியை கராமலைஸ் செய்யும்போது அதை கலக்கக்கூடாது. அது உருகி மஞ்சள் நிறம் வரும் வரை காக்க வேண்டும்.

சீனியை கராமலைஸ் செய்யும்போது மரஸ்பூன் பயன்படுத்தவும் பின் காய்ச்சிய பாலை கராமலைஸ் செய்த சீனியில் சேர்க்கவும்.

ஒரு பங்கு பாலை மட்டும் சேர்க்கவும். பிறகு நன்கு துணியில் கட்டி தொங்க விடப்பட்டு நீர் வடிந்த தயிரை சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளைக் கவரும் சாக்லேட் மற்றும் ஆரோக்கியமான ஆப்பிள் பர்பி செய்வது எப்படி?
dal-palak-oothappam

மிஷ்டி டோய்க்கு தேவை

பால் 4கப்

சீனி முக்கால் கப்

தண்ணீர் எடுக்கப்பட்ட தயிர் முக்கால் கப்

குங்குமப்பூ சிறிது

பிஸ்தா அலங்கரிக்க

செய்முறை:

பாலை ஒரு கடாயில் காய்ச்சி குங்குமப்பூ சேர்க்கவும். பிறகு பாரில் சீனியை சூடுபடுத்தி கரையவைக்கவும். கரையும்போது கலக்கக் கூடாது. சீனி நன்கு கரைந்த பிறகு காய்ச்சிய பாலில் ஒரு கப் சீனியில் சேர்க்கவும் சீனி பாலில் கரையும் வரை கலக்கவும்

இந்த கலவையை காய்ச்சி வைத்திருக்கும் மிச்சப்பாலில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.

இப்போது காய்ச்சிய சீனி சேர்த்து மொத்த பாலையும் தண்ணீர் எடுக்கப்பட்ட தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு மண் பானையை எடுத்து உள்ளே தயிரால் தடவி வைக்கவும். இப்போது மொத்த கலலையையும் பானையில் சேர்த்து வெளியே நான்கில் இருந்து 6மணி நேரம் வைக்கவும் அல்லது இரவு முழுவதும் வைக்கவும்.

பிறகு இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடும்போது நட்ஸ் சேர்த்து அலங்கரித்து சாப்பிட மிஷ்டி டோய் சுவையாக இருக்கும். இந்த வெயிலுக்கு ஏற்ற குளிர்ச்சியான இனிப்பான சுவையுடைய உணவாகும்.

logo
Kalki Online
kalkionline.com