பனங்கிழங்கில் நான்கு விதமான சுவையான ரெசிபிகள்!
பனங்கிழங்கு பாயசம்
தேவை:
பனங்கிழங்கு - 4,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பனை வெல்லக் கரைசல் - அரை கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல், உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காது 2, 3 நிமிடம் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதி வருகையில் இறக்கவும். சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை சேர்த்துப் பரிமாறவும். சுவையான சத்தான பனங்கிழங்கு பாயாசம் தயார்.
பனங்கிழங்கு வடை
தேவை:
பனங்கிழங்கு (சுத்தம் செய்து, நறுக்கியது) - 2 கப்
கடலைப் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
அரிசி - 2 மேஜைக்கரண்டி
வெங்காயம் (நறுக்கியது) - அரை கப்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்-பிடி
கல் உப்பு - தேவைக்-கேற்ப
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து, தண்ணீரை வடித்துவிடவும். முதலில் மிக்சியில் மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பொடி செய்யவும். பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமல் இரண்டு பாகமாக பிரித்து அரைக்கவும். மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக இருக்கலாம்.
பிறகு வேகவைத்து சுத்தம் செய்த பனங்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில், அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து, பிசையவும். கைகளை தண்ணீரில் நனைத்து, வடையாக தட்டி பொரித்தெடுக்கவும். சூப்பர் சுவையில் பனங்கிழங்கு வடை ரெடி.
பனங்கிழங்கு பர்பி
தேவை:
வேகவைத்த பனங்கிழங்கு - 6
தண்ணீர் -1/4கப்
சர்க்கரை -1 கப்
ஏலக்காய் - 2
நெய் -2 டேபிள் ஸ்பூன்
துருவிய பிஸ்தா பருப்பு -1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வைக்கவும். வேகவைத்த பனங்கிழங்கின் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் ஏலக்காயுடன் சேர்த்து ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு துருவலை மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பனங்கிழங்கு துருவல் சர்க்கரையுடன் நன்றாக கலந்து கெட்டியாக மாறும் வரை வதக்கவும். இறுதியாக மீதமுள்ள நெய் சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் நன்கு வதக்கி பின்பு நெய் தடவிய தட்டில் பரப்பி வைக்கவும். பின்பு துருவிய பிஸ்தா பருப்பை தூவிவிட்டு, விருப்பமான வடிவில் வெட்டி எடுக்கவும். சுவையான பனங்கிழங்கு பர்பி தயார்.

