

கோவைக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் – 10
உளுத்தம்பருப்பு – ½ கப்
கடலைப்பருப்பு – ½ கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
புளி – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோவைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, பருப்புகளைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதனுடன் சிவப்பு மிளகாய், சீரகம், மிளகு சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கோவைக்காய் மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்ஸியில் போட்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்த சட்னியை கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்த்து பரிமாறவும்.
கோவைக்காய் தொக்கு
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் – ¼ கிலோ
புளி – ஒரு எலுமிச்சை பழ அளவு
பூண்டு – 20 பல்
இஞ்சி – ஒரு துண்டு
சின்ன வெங்காயம் – ஒரு கப்
தக்காளி – 2
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
சீரகம்–மிளகு – 1 ஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன் பொடி செய்தது
மிளகாய்த்தூள் – 50 கிராம்
மல்லித்தூள் – 25 கிராம்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கோவைக்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். மிக்ஸி ஜாரில் கோவைக்காய், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், சீரகம்–மிளகு, தக்காளி சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
புளியை கரைத்து வடிகட்டி, அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கலந்து வதக்கிய கலவையுடன் சேர்க்கவும்.
கலவை நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கி, பின்னர் பெருங்காயத்தூள் வெந்தயப்பொடி சேர்த்து இறக்கவும்.
ஆறிய பின் பாட்டிலில் சேமித்து வைக்கலாம். தயிர் சாதம், இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.
கோவைக்காய் ஃபிரை
செய்முறை:
கோவைக்காயை நான்காக கீறி வைக்கவும். அதனுடன் இஞ்சி–பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரிசி மாவு சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் காய்ந்ததும், பிசறிய கோவைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.