ஆரோக்கியமான உணவுகள், சுலபமான சமையல்!

Easy cooking tips
Healthy foods
Published on

வெஜிடபிள் கூட்டு:

பூசணிக்காய் 1 கீற்று

வெள்ளரிக்காய் 1

சுரைக்காய் நறுக்கியது 1 கப்

பீர்க்கங்காய் நறுக்கியது 1 கப்

சௌசௌ 1

பயத்தம் பருப்பு 1/2 கப்

உப்பு தேவையானது

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

தேங்காய் ஒரு மூடி

மிளகாய் 1

மிளகு 1/2 ஸ்பூன்

சீரகம் 1/2 ஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்

சுரைக்காய், பீர்க்கங்காய்களை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காயையும் சௌசௌவையும் தோல் நீக்கி நறுக்கவும். பூசணிக்காயை தோல், விதை நீக்கி துண்டுகளாகவும்.

குட்டி குக்கரில் பயத்தம் பருப்பு, நறுக்கிய காய்கள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு அணைக்கவும். தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். குக்கரில் பிரஷர் போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து கொட்ட மிகவும் ருசியான, நீர் சத்து மிகுந்த, வெஜிடபிள் கூட்டு தயார்.

குழந்தைகள் விரும்பும் தயிர் சாதம்:

வடித்த சாதம் 2 கப்

மாதுளம்பழ முத்துக்கள் 1 கைப்பிடி

பச்சை திராட்சை 10

ஆப்பிள் துண்டுகள் 1/2 கப்

அன்னாசி துண்டுகள் 1/4 கப்

புளிக்காத தயிர் தேவையானது

உப்பு சிறிது

இதையும் படியுங்கள்:
வழக்கமான உணவுகள்: புதிய சுவையில் அசத்தும் ரெசிபிகள்!
Easy cooking tips

1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் விட்டு குழைவாக சாதம் வடித்துக் கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து நன்கு மசித்து ஆறவிடவும். பொடியாக நறுக்கிய அன்னாசித்துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பச்சை திராட்சை துண்டுகள் மற்றும் மாதுளம் பழ முத்துக்களையும் சேர்த்து கலந்து சாப்பிட வயிற்றுக்கு இதமும், நாவிற்கு சுவையும் தரும். பசியை போக்கும் அருமையான உணவு இது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பழங்களுக்கு பதில் காய்கறிகளைக்கூட பொடியாக நறுக்கி சேர்க்கலாம். வெள்ளரிக்காய் துண்டுகள், தக்காளி, கேரட் பொடியாக நறுக்கியது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிறிது இஞ்சித்துருவல் என சேர்த்து செய்ய மிகவும் ருசியாக இருக்கும்.

சுரைக்காய் ஈஸி கட்லெட்:

சுரைக்காய் 1

கோதுமை மாவு 1 கப்

கடலை மாவு 2 ஸ்பூன்

அரிசி மாவு 4 ஸ்பூன்

ரவை 1/4 கப்

பொடி உப்பு தேவையானது காரப்பொடி 1 ஸ்பூன்

கரம் மசாலா 1/2 ஸ்பூன்

தனியா தூள் 1 ஸ்பூன்

சாட் மசாலா 1/2 ஸ்பூன்

உப்பு சிறிது

கொத்தமல்லி சிறிது

இதையும் படியுங்கள்:
உணவுதான் கசப்பு... ஆனால், உபயோகம் அத்தனையையும் இனிப்பு...!
Easy cooking tips

சுரைக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். அத்துடன் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, ரவை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, காரப்பொடி, கரம் மசாலா, சாட் மசாலா, உப்பு, தனியா தூள் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான தண்ணீரை தெளித்து கெட்டியாக பிசையவும். ரெண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து வடை போல அல்லது ஹார்ட் வடிவில் செய்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் நன்கு சூடானதும் நாலைந்து கட்லட்டுகளாக போட்டு இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும். ருசியான சுரைக்காய் கட்லெட் தயார். செய்வது மிகவும் சுலபம்.

இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com