

பொதுவாக நாம் உண்ணும் உணவுப்பொருள், நமது உடல் உறுப்பு எந்த வடிவில் உள்ளதோ அந்த உறுப்பு பலம்பெற உதவும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். அந்த வகையில் வால்நட் மனித மூளையின் வடிவத்தை ஒத்திருப்பது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல அதிசய நன்மைகளைக் கொண்டுள்ளது என்கிறார்கள்.
வால்நட்ஸ், மூளை செல்களின் வளர்ச்சி மற்றும் தகவல்தொடர்புக்கு அவசியமான தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலமான ஆல்பா-லினோலெனிக் அமிலத்தை (ALA) அதிகம் கொண்டுள்ளது.இது அல்சைமர் வரும் வாய்ப்பை குறைப்பதாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
வயதான காலத்தில் வரும் ஞாபக மறதி நோயான அல்சைமர்யை வராமல் தடுக்கும் ஆற்றல் வைட்டமின்" இ" க்கு உண்டு என்கிறார்கள் சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் . இதற்கு தினமும் 2000IU வைட்டமின்' இ' எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். வால்நட்ஸில் வைட்டமின் "இ" அதிகம் உள்ளது. மேலும் அதிலுள்ள பாலிஃபீனால்கள் மூளையில் “ஃப்ரீ ரேடிக்கல்களை” எதிர்த்து செல்களை பாதுகாக்கின்றன. இதனால்:மூளை செல்களின் சேதம் குறைகிறது, வயதான செயல்முறை மெதுவாகிறது, நினைவாற்றல் மற்றும் தெளிவான சிந்தனை செயல்பாட்டிற்கு உதவுகிறது.
மூளையின் நியூரான்கள் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது, அல்சைமர், பார்கின்சன் போன்ற நரம்புச் சிதைவு நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள பாலிஃபீனாலிக் சேர்மங்கள், மூளை அழற்சியை குறைத்து, நினைவாற்றலை வலுப்படுத்துகிறது. மூளை நரம்புகளுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. மூளை சிதைவைக் கட்டுப்படுத்துகின்றன. மூளையின் செயல்திறனை நீண்ட காலம் சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றன
வால்நட் பருப்பு உடைக்க கடினமாக இருந்தாலும் அதன் பலன்கள் அதிகம்.இதிலுளாள கொழுப்பு அமிலங்கள் பெண்களின் மார்பக புற்றுநோய்யை வராமல் தடுக்கும் என்கிறார்கள்.தினமும் கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட மார்பக புற்றுநோய் வராது என்கிறார்கள் மார்ஷல் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள்.
வாரத்தில் கை நிறைய 5 முறை வால்நட் சாப்பிடுங்கள் அது உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயநோய் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை 18 சதவீதம் குறைக்க முடியும் என்கிறார்கள்.வால்நட்டில் N6 மற்றும் N8 பாலிஅன் சேசுரேட்டடு கொழுப்பு அமிலம் உள்ளது. இதுதான் இரத்த குழாய்களில் படியும் கொழுப்பை படியவிடாமல் செய்கிறது.
வால்நட்டில் உள்ள ஆல்பா லினோலினிக் அமிலம் பணியிடத்தில் எழும் வேலை பளுவால் வரும் மன அழுத்தத்தை குறைக்கும், நுரையீரல் புற்றுநோய்யை தவிர்க்க உதவுகிறது.
வாரத்திற்கு இருமுறை 28 கிராம் வால்நட் சாப்பிடுகின்றவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் முதுமையும், ஞாபக மறதியும் தள்ளிப்போகும். தோல் நோய்கள், பால்வினை நோய்கள், காசநோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.
வால்நட் நல்ல தூக்கத்தை வரவழைக்கும் "மெலட்டோனின்" அளவை ரத்தத்தில் அதிகரிக்கிறது என்கிறார்கள்.இந்த மெலடோனின் மனித பயோலாஜிக்கல் கிளாக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உடையது.
வால்நட் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் அதிகரித்து, மரண அபாயம் 39 சதவீதம் குறைகிறது என்கிறார்கள். உடல் எடை குறைப்பில் வால்நட் சிறந்த பங்காற்றுகிறது. அதேவேளையில் உடலில் நல்ல கொழுப்பை சேர்க்கிறது. வால்நட்டில் மட்டும்தான் கொட்டை வகைகளில் பாலி அன் சாசுரேட்டட் கொழுப்பு உள்ளது. அதனால் இதயநோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது என்கிறார்கள் அமெரிக்க இதய நல அசோசியேஷன் ஆய்வாளர்கள்.
வால்நட் பருப்பில் "ஆர்ஜினிக்" என்ற அமினோ அமிலம் உள்ளது. இது கல்லீரல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதற்கு வால்நட்டை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அரை குறையாக விழுங்க கூடாது என்கிறார்கள்.