
இந்து பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படுவது தீபாவளி தான். இந்து மத நம்பிக்கையின் படி கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த தினமே தீபாவளியாக கொண்டாடுகிறோம். தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு பலகாரங்கள் தான்.
பண்டைய காலங்களில் எல்லாம் தீபாவளி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். முறுக்கு, அதிரசம், அச்சுமுறுக்கு என பல பலகாரங்கள் இதில் அடங்கும். காலம் நவீனமாகும் போது அனைவரும் குலாப் ஜாமூன் செய்ய ஆரம்பித்தார்கள். இது ரெடியாகவே கடைகளில் மிக்ஸாக கிடைக்கவே பலரும் அதை பிசைந்து ஒரே இரவில் செய்து விடுகிறார்கள். ஆனால் இது கடைகளில் ரெடிமேட்டாக தயாரிக்கப்படுவதால் அது இயற்கையானதும் இல்லை, சத்தானதும் இல்லை.
ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு இந்த தீபாவளியை உபயோகமானதாகவும், ஆராக்கியமானதாகவும் மாற்ற விரும்பினால் ஹெல்தியான ரெசிபிகளை செய்து கொடுத்து அசத்துங்கள். அப்படி குலாப் ஜாமூன் என்றாலே குழந்தைகளுக்கு பேவரைட் தான். அதை இப்படியும் வித்தியாசமாக செய்து அசத்தலாம் வாங்க.
அதாவது ஈஸியாக சர்க்கரை வள்ளி கிழங்கில் குலாப் ஜாமூன் செய்து அசத்தலாம். சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, சி, பி6, பொட்டாசியம், இரும்புச்சத்து, செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, கண் பார்வைக்கு நல்லது, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் எடை குறைப்புக்கு உதவுகிறது.
குழந்தைகளுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு ஆரோக்கியமானதாகும். கர்ப்பிணி பெண்களுக்கு கூட மருத்துவர்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதை வலியுறுத்துகிறார்கள். இப்படி அதிக சத்துக்களை கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கில் டேஸ்டியான குலாப் ஜாமூன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளி கிழங்கு - 3 பெரியது
கார்ன் ப்ளவர் மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொறிப்பதற்கு
நாட்டு சர்க்கரை (அ) வெல்லம் - சர்க்கரை பாகு காய்ச்சும் அளவிற்கு
செய்முறை:
முதலில் இட்லி பாத்திரம் அல்லது குக்கரில் போட்டு சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து கொள்ளவும். பிறகு அதன் தோலை உரித்து மசித்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் கார்ன் ப்ளவர் மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து மாவு பதத்தில் உருட்டி வைத்து கொள்ளவும். உடனே சிறிது சிறுது உருண்டைகளாக உருட்டி அதை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
மறுபக்கம் சர்க்கரை பாகுவிற்கு வெல்லத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொள்ளவும். பிறகு கடைசியாக ஏலக்காய் பொடி சேர்த்து இறாக்கி வைத்து கொள்ளலாம். இதில் பொறித்து வைத்த உருண்டைகளை போட்டு எடுத்தால் டேஸ்டியான குலாப் ஜாமூன் ரெடியாகிவிடும்.
உங்கள் குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.