
இளநீர் பாயசம்:
செய்யத் தேவையான பொருட்கள்:
இளநீர் -இரண்டு கப்
இளநீர் வழுக்கை- இரண்டு கப்
ஸ்வீட் கன்டன்ஸ்டு மில்க்- 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால்-11/2 கப்
குங்குமப்பூ -நான்கு இழைகள்
செய்முறை:
இளநீர் வழுக்கையை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து குங்குமப்பூவை தூவி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். சில்லென்று ஆனவுடன் அனைவரும் பருகுங்கள். குளிர்ச்சியோ குளிர்ச்சி அனைவரின் வயிறும் ,உடலும் குளிர இதைக் குடித்து விட்டு வாழ்த்துவார்கள்.
சக்க அடை
செய்ய தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்த பெரிய சைஸ் பலாச்சுளைகள்- 8
வெல்லத் துருவல்- சிறிய கப்
தேங்காய் துருவல் -ஒரு கப்
ஏலத்தூள்- ஒரு சிட்டிகை
அரிசி மாவு- 2 கப்
வாழை இலை துண்டுகள்- ஒன்பது
செய்முறை:
பலாச்சுளைகளை பொடியாக அரிந்து வெல்லத்துருவலுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்து வைக்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து வாழை இலையில் தட்டி, அந்தந்த இலைகளோடு ஒரு பெரிய தட்டில் வைத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இதை மூன்றில் இருந்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இடியாப்பத்தட்டுகளிலும் வைத்து வேகவைத்து எடுக்கலாம். இது இன்னும் எடுக்க எளிதாக இருக்கும்.
சுடச்சுட வாழை இலையின் வாசத்துடன் சாப்பிடுவது ஒரு ருசி. ஆற வைத்து சாப்பிட்டாலும் எந்த மாற்றமும் இல்லாமல் நன்றாக இருக்கும். சீசனில் செய்து அசத்துங்கள்.