பழங்கால சேனைக்கிழங்கு குழம்பும், பாட்டி ஸ்டைல் திருவிழா காய்கறி குழம்பும்..!

Healthy kuzhambu recipes in tamil
Kuzhambu recipes
Published on

சேனைக்கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு-  250 கிராம் 

புளி  _ ஒரு எலுமிச்சை அளவு (ஒரு கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்தல்)

சிறிய வெங்காயம்_  10  

பூண்டு_   6 பற்கள்

மஞ்சள்தூள்_    ½ டீஸ்பூன்

மிளகாய்தூள்_ 1½ டீஸ்பூன்

தனியாதூள்_    1 டீஸ்பூன்

சாம்பார்தூள் _ 1 டீஸ்பூன்

உப்பு _தேவையான அளவு

நல்லெண்ணெய் _    2 டேபிள்ஸ்பூன்

கடுகு _ ½ டீஸ்பூன்

வெந்தயம்_     ¼ டீஸ்பூன்

கறிவேப்பிலை_ சில இலைகள்

செய்முறை:  சேனைக்கிழங்கை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு சேர்த்த நீரில்  கிழங்கை வேக வைத்து வடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்க்கவும். பின்னர் புளி சாறு ஊற்றி, தேவையான உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த சேனைக் கிழங்கை சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் நன்கு வேக விடவும். குழம்பு பதமாகி வந்ததும் தீயை அணைத்து, கறிவேப்பிலையுடன் இறக்கவும்.

சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிட அருமை.  பப்பாளி துவையல், அவியல் போன்றவை சேர்ந்தால் சிறந்த சுவையை அளிக்கும். இது ஒரு நல்ல சுத்த சைவ  வைத்திய உணவு வகை ஆகும்.

இதையும் படியுங்கள்:
சுவையான தவா புலாவ் - ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வீட்டிலேயே!
Healthy kuzhambu recipes in tamil

திருவிழா காய்கறி குழம்பு (கலவை குழம்பு) 

பண்டிகை, விருந்துகளில் செய்யப்படும் பாரம்பரிய தமிழர் குழம்பு. பலவகை காய்கறிகள் மற்றும் பருப்புகள் சேர்த்த சுவை மிகுந்த குழம்பு. இதை செய்ய

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு_ ½ கப்

புளி  _ சிறிய எலுமிச்சை அளவு

சின்ன வெங்காயம் _ 10

தக்காளி   _ 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை  _ சில

மஞ்சள்தூள் _   ½ டீஸ்பூன்

மிளகாய்தூள்_ 1½ டீஸ்பூன்

உப்பு_     தேவையான அளவு

தேங்காய்  துருவல்_  ½ கப்

எண்ணெய் _ 2 டேபிள்ஸ்பூன்

கடுகு _ ½ டீஸ்பூன்

வெந்தயம்_     ¼ டீஸ்பூன்

காய்கறிகள்_   சுரைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், முள்ளங்கி, முட்டைகோஸ், பீர்க்கங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் (தேவையான காய்கறிகள் சேர்க்கவும்.)

வெண் கொண்டைக்கடலை_1/4 கப் (நனைத்து வேக வைத்தது) காய்கறிகள் அனைத்தும் சுத்தம் செய்து, நடுத்தர அளவில் நறுக்கி வைத்திருக்க வேண்டும்.

மசாலா தயாரிக்க:

வறுத்த  துவரம்பருப்பு_    1 டீஸ்பூன்

மிளகு_    ½ டீஸ்பூன்

சீரகம்_ ½ டீஸ்பூன்

பெருங்காயம்_ சிறிது

நறுக்கிய இஞ்சி _சிறிது

தேங்காய்துருவல்_   ½ கப்

இவற்றை வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதையும் படியுங்கள்:
பால் பணியாரமும் - சுவையான கந்தரப்பமும்!
Healthy kuzhambu recipes in tamil

செய்முறை:  துவரம்பருப்பை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். காய்கறிகளை ஒவ்வொன்றாக அரை வேக்காடு  வரை வேகவைக்கவும்.(முதலில் கனமான காய்கறிகள், பிறகு மென்மையானவை)

பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளிக்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு, புளிச்சாறு சேர்க்கவும். புளிச்சாறுடன் காய்கறிகள், வேக வைத்த பருப்பு, கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் தயார் செய்த தேங்காய் விழுதை சேர்க்கவும். மெதுவாக கிளறி 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சாதத்துடன் தேங்காய் துவையல், அப்பளம், பொரியல் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.  இது உண்மையான “திருவிழா சுவை” கொண்ட பாட்டி ஸ்டைல் குழம்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com