

ஆரோக்கியமான பக்கோடா செய்யத் தேவையான பொருட்கள்
1. பாலக்கீரை பக்கோடா
தேவை:
பொடியாக நறுக்கிய பாலக்கீரை – 1 கப்
உருளைக்கிழங்கு –1 பொடியாக நறுக்கியது,
கடலைமாவு – 150 கிராம்
அரிசிமாவு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 4
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
நறுக்கிய பாலக்கீரை, உருளைக்கிழங்கு, கடலைமாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றுடன் அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, நெய்விட்டு பிசிறி, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். எண்ணெயை காயவைத்து, மாவை அதில் கிள்ளிப்போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். வேற லெவல் சுவையில் பாலக்கீரை பக்கோடா ரெடி.
2. புடலங்காய் பக்கோடா
தேவை:
புடலங்காய் – 1 (மெல்லிய வட்டமாக நறுக்கி நீரில் கழுவி வடித்தது)
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்தூள் – ½ டீஸ்பூன்
சீரகத்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
வெங்காயம் – 1 (சிறிது நறுக்கியது – விருப்பம்)
கருவேப்பிலை – சிறிது
தண்ணீர் – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு கெட்டியான மாவாக கலக்கவும். புடலங்காய் வட்டங்களை அந்த மாவில் மூழ்கடித்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். மொறு மொறு புடலங்காய் பக்கோடா ரெடி.
3. ஆப்பிள் பக்கோடா
தேவை:
ஆப்பிள் – 1 (நறுக்கியது)
சாமை மாவு – 1/2 கப்
உப்பு – சிறிது
மிளகு பொடி – 1/4 டீஸ்பூன்
இஞ்சி துருவல் – சிறிது
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
ஆப்பிளை நறுக்கி உப்பு, மிளகு பொடி, இஞ்சி துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதனுடன் சாமை மாவு சேர்த்து பக்கோடா கலவையை நன்கு குழைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி சிறு உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். வித்தியாசமான சுவையில் ஆப்பிள் பக்கோடா ரெடி.
4. நெல்லிக்காய் பக்கோடா
தேவை:
துருவிய நெல்லிக்காய் – அரை கப்
கோதுமைமாவு, கடலைமாவு – 1/4 கப்
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
துருவிய நெல்லிக்காயுடன் அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை வாணலியில் காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். அல்டிமேட் சுவையில் நெல்லிக்காய் பக்கோடா தயார்.
5. அவல் பக்கோடா
தேவை:
அவல் - 200 கிராம்
கடலைமாவு - 100 கிராம்
அரிசிமாவு - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்
சமையல் சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை சுத்தம் செய்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். வறுத்த வேர்கடலையையும் அதேபோல் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். அவல் மற்றும் வேர்கடலை மாவுடன், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம், சமையல் சோடா உப்பு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை பிசறி விட்டு கரகரப்பாக பொரித்து எடுக்கவும். சுவையான அவல் பக்கோடா ரெடி.
6. மக்காசோள பக்கோடா
தேவை;
வேகவைத்து உரித்த மக்காசோளம் - ஒன்று,
புதினா - ஒரு கப்
அரிசி மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
வெங்காயம் (பொடியாக நறுக்கியது ) - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை -சிறிது
செய்முறை:
புதினாவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். உரித்த மக்காசோளத்தை மிக்சியில் போட்டு, ஒன்றுக்கு இரண்டாக அரைத்துக் கொள்ளவும். இந்த இரண்டு கலவையையும், அரிசி மாவில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்திற்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் நன்றாக சூடானவுடன், அதில் சிறிது சிறிதாக பக்கோடாக்களாக கிள்ளி போட்டு பொரித்து எடுக்கவும். மக்காசோள சுவையும், புதினாவும் சேர்த்து சுவையான பக்கோடா தயார்.
இந்த செய்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கடைகளில் கிடைக்கும் ஆரோக்கியமற்ற எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களைத் தவிர்த்து, உங்கள் குடும்பத்தினருக்கு சத்துக்கள் நிறைந்த, வீட்டிலேயே தயாரித்த பாதுகாப்பான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டியை வழங்கி மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும்.