சத்தான சுவையில் நான்கு வகை பனீர் ரெசிபிகள்!


Four types of paneer recipes
healthy paneer recipes
Published on

பனீர் கீர் 

தேவை:

பசும் பால் - அரை லிட்டர்

துருவிய பனீர் - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன்

முந்திரி, பாதாம் - கால் கப்

சர்க்கரை (பொடித்தது) -  கால் கப்

சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை:

அடிகனமான வாணலியில் பசும் பால் போட்டு, கெட்டியாகும் வரை காய்ச்சவும். பின்னர் சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கலக்கவும். பாலைச் சற்று ஆறவைத்து துருவிய பனீர், பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து, சாரைப்பருப்பு தூவி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும். சத்தான, சுவையான பனீர் கீர் ரெடி.

பனீர் லட்டு

தேவை:

துருவிய பனீர் – அரை கப்,

துருவிய கேரட் – 1 கப்,

 சர்க்கரை – 1 கப், ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை, 

வறுத்த முந்திரி - 10, 

உலர் திராட்சை – சிறிதளவு, 

நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை:

நெய்யில் கேரட்டை நன்கு வதக்கி, சர்க்கரை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். துருவிய பனீரில் உள்ள அதிகப்படியான நீரை கையால் பிழிந்து நீக்கி, கேரட் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து லட்டு பிடிக்கவும். சுவையான பனீர் லட்டு தயார்.

இதையும் படியுங்கள்:
ருசியோ ருசி - கொங்கு ஸ்பெஷல் புளி வடை; பலாக்கொட்டை தோசை!

Four types of paneer recipes

பனீர் பக்கோடா

தேவை: 

பனீர் துண்டுகள் – சிறிதளவு, மைதா மாவு – கால் கப், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், சில்லி சாஸ், சோயா சாஸ், சோள மாவு – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: 

மைதா மாவு, சோளமாவுடன் அனைத்து சாஸ்களையும் சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து, கடைசியாக பனீர் துண்டுகளை சேர்த்துப் பிசிறி எடுக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும். மொறு மொறு பனீர் பக்கோடா தயார்.

பனீர் கட்லெட் 

பனீர் – 100 கிராம் 

உருளைக்கிழங்கு – 3 (பெரியது) 

கேரட் – 2 

குடைமிளகாய் நறுக்கியது – அரை கப் 

பூண்டு – 4 பல் 

பச்சை மிளகாய் – 2 

மல்லித்தழை – சிறிதளவு 

வெங்காயம் – 1 (சிறியது) 

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் 

உப்பு – தேவைக்கு 

கார்ன்ஃப்ளார் – 3 டேபிள்ஸ்பூன் 

ரஸ்க் தூள் – தேவைக்கு 

எண்ணெய் – பொரிக்க 

இதையும் படியுங்கள்:
இஷ்டப்பட்டு செய்யும் சமையலை கஷ்டமின்றி எளிதில் முடிக்கும் வழிகள்..!

Four types of paneer recipes

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்.  அனைத்து காய்கறிகளையும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பனீருடன், உருளைக்கிழங்கு, அனைத்து காய்கறிகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவும். 

பிறகு கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக் பேஸ்ட்டாக கரைத்து வைக்கவும். நாம் செய்து வைத்த கலவையை சிறிய உருண்டைகளாக தட்டி, கார்ன்ஃப்ளார் பேஸ்ட்டில் முக்கி, பிரெட் கிரம்சில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com