ஆரோக்கியமான பொரிவிளங்கா உருண்டை மற்றும் எனர்ஜி பால்ஸ் செய்யலாம் வாங்க!

Porivillanga orundai
Porivillanga orundai and Energy BallsImage Credits: Jeyashri's Kitchen

பொரிவிளங்காய் உருண்டை தமிழர்களின் பாரம்பரியமான சிற்றுண்டிகளில் ஒன்று. இது இனிப்பு மற்றும் உறைப்பு கலந்த சுவை கொண்டது. அதிக நாட்கள் இந்த உருண்டையை பதப்படுத்தி வைத்துக் கொள்ளலாம் கெட்டுப் போகாது. இதில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் குழந்தைகள் வளர்ச்சிக்கு நல்லதாகும்.

பொரிவிளங்கா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி புழுங்கல் அரிசி- 1 ½ கப்.

பாசிப்பருப்பு-1/2கப்.

ஏலக்காய்-4

சுக்கு-1 துண்டு.

நெய்- 2தேக்கரண்டி.

தேங்காய்-1/4கப்.

பொட்டுக்கடலை-1/4கப்.

வறுத்த வேர்கடலை-1/2கப்.

வெல்லம் -1 ½ கப்.

பொரிவிளங்கா உருண்டை செய்முறை விளக்கம்:

முதலில் 1 ½ கப் இட்லி புழுங்கல் அரிசியை ஃபேனிலே சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். அடுத்து அதே ஃபேனில் ½ கப் பாசிப்பருப்பையும் நல்ல பொன்னிறமாக வறுத்தெடுத்து இரண்டையும் மிக்ஸியில் மாற்றிவிட்டு அத்துடன் ஏலக்காய் 4, சுக்கு ஒரு துண்டு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை நன்றாக சலித்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் ஃபேனை வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு அதில் 1/4 கப் சிறிதாக நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். இத்துடன் 1/4கப் பொட்டுக்கடலை, ½ கப் வறுத்த வேர்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதை அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து கிண்டி வைக்கவும்.

இப்போது 1 ½ கப் வெல்லத்துடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து தக்காளி பதம் வரும் வரை வைத்து எடுத்து விடவும். இந்த பாவை அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து நன்றாக கிண்டி விட்டு கையிலே நெய் கொஞ்சம் தடவி கொண்டு சின்ன சின்ன உருண்டை பிடிக்க வேண்டும். கடைசியாக அரிசி மாவில் உருட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

எனர்ஜி பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பாதாம்-1கப்

முந்திரி-1கப்.

பிஸ்தா-1கப்.

வால்நட்-1கப்.

பூசணி விதை-1கப்.

தர்பூசணி விதை-1 கப்.

சூரியகாந்தி விதை-1 கப்.

வறுத்த வேர்கடலை-1/2கப்.

பாலி விதை-1கப்.

வெள்ளை எள்ளு-1/2 கப்.

ஏலக்காய்-2

நாட்டு சக்கரை-1கப்.

எனர்ஜி பால்ஸ் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு ஃபேனில் பாதாம் 1கப், முந்திரி 1 கப், பிஸ்தா 1 கப், வால்நட் 1 கப் சேர்த்து வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது ஃபேனில் 1கப் பூசணி விதை, 1 கப் தர்பூசணி விதை, 1 கப் சூர்யகாந்தி விதை சேர்த்து வறுத்தெடுத்து கொள்ளவும். இத்துடன் ½ கப் வறுத்த வேர்க்கடலையும் சேர்த்து வறுத்து எடுக்கவும். கடைசியாக 1 கப் பாலி விதை அத்துடன் வெள்ளை எள் 1/2 கப் சேர்த்து வறுத்தெடுத்து அத்துடன் சேர்த்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
நரசிம்மருக்கு மிகவும் பிடித்த பானகம்...செய்யலாம் வாங்க!
Porivillanga orundai

இத்துடன் ஏலக்காய் 2 சேர்த்து நன்றாக அரைத்து  எடுத்து கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நாட்டு சக்கரை 1 கப் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சி எடுத்து மாவுடன் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடைசியாக கையில் சிறிது நெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால் எனர்ஜி பால்ஸ் தயார். இதில் விட்டமின், மெக்னீசியம், இரும்புசத்து, புரதச்சத்து என்று நிறைய சத்துக்கள் இருக்கிறது குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நீங்களும் வீட்டிலே ஒருமுறை செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com