சுவை, ஆரோக்கியம் இரட்டிப்பு: பரங்கிக்காய் சப்பாத்தி, துவையல், பாயசம் செய்வது எப்படி?

சுவையும் ஆரோக்கியமும் சேர்க்கும் பரங்கிக்காய் ரெசிபிகள்:
healthy-pumpkin-recipes
healthy-pumpkin-recipes
Updated on

தேவை:

கோதுமை மாவு – 1 கப்

பரங்கிக்காய் – 1 கப் (நறுக்கியது)

உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் – 2

எண்ணெய் – ½ டீஸ்பூன்

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் நறுக்கிய பரங்கிக்காய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பிசையவும். சப்பாத்தி உருட்யை எடுத்துக் கொண்டு மாவை  சப்பாத்திகளாக  உருட்டவும். பின்னர் அவற்றை தவாவில் போட்டு மிதமான தீயில் இரு பக்கமும் பிரட்டி எடுத்து சூடாக பரிமாறவும். சுவையான பரங்கிக்காய் சப்பாத்தி ரெடி.

பரங்கிக்காய் துவையல்

தேவை:

பரங்கிக்காய் – 1 கப் (தோல், விதை நீக்கி நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1

பூண்டு – 4 பல்

வற மிளகாய் – 2

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் 

தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் 

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 2 டீஸ்பூன் 

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பூண்டு, மிளகாய் வதக்கவும். பிறகு வெங்காயம், பரங்கிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக தேங்காய் சேர்த்துக் கிளறி ஆற விடவும்.

சூடு குறைந்ததும் உப்பு சேர்த்து அனைத்தையும் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து மேலே ஊற்றினால் சுவையான பரங்கிக்காய் துவையல் தயார்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் சுவையில் தட்டைப் பயறு காரக்குழம்பு செய்வது எப்படி?
healthy-pumpkin-recipes

பரங்கிக்காய் பாயசம்

தேவை:

சேமியா - 100 கிராம்

பரங்கிக்காய் - 100 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

முந்திரி -  6

உலர்ந்த திராட்சை - 10

நெய் - 4 ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

பசும் பால் - கால் லிட்டர்

ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்

செய்முறை:

பரங்கிக்காயை துருவி நெய்யில் வறுத்துக்கொள்ளவும். முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துக்கொள்ளவும் . 3 டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் சேமியாவை போடவும். மூன்று நிமிடம் வேகவிட்டு தண்ணீரை வடிகட்டவும் அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து கொதித்ததும் சேமியாவை அதில் போடவும். சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும்.

வதக்கிய பரங்கிக்காயை அதில் சேர்க்கவும். 3 நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பை ஆஃப் செய்யவும். நன்றாக ஆறியதும் அதில் பால் சேர்க்கவும். பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். அல்டிமேட் சுவையில் பரங்கிக்காய் பாயாசம் தயார்.

logo
Kalki Online
kalkionline.com