

அல்மாடி சோறு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.உதிர் உதிராக வடித்த சாதம் 1 கப்
2.பூண்டுப் பல் 12
3.மிளகு 1½ டீ ஸ்பூன்
4.சீரகம் 1 டீஸ்பூன்
5.நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
6.கடுகு ½ டீஸ்பூன்
7.உளுத்தம் பருப்பு ½ டீஸ்பூன்
8.கறிவேப்பிலை 2 இணுக்கு
9.பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்
10.உப்பு தேவையான அளவு
11.நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு 10
12.கொத்தமல்லி இலைகள் 20
செய்முறை:
மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பூண்டுப் பற்களை நசுக்கிச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின் அதில் மிளகு ஜீரகப்பொடியைத் தூவி, சாதத்தையும் சேர்த்து நன்கு கிளறவும்.
தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளவும். பின் அந்த சாதத்தின் மீது முந்திரிப்பருப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். உடல் வலி மற்றும் அசதியைப் போக்கி சுறு சுறுப்பு தரும் அல்மாடி சோறு தயார்.
வரமல்லி விதை துவையல் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
2.காய்ந்த கொத்தமல்லி விதை 50 கிராம்
3.பூண்டுப் பல் 8
4.காஷ்மீரி சில்லி 6
5.கறிவேப்பிலை 2 இணுக்கு
6.புளி (கொட்டை நீக்கியது) நெல்லிக்காய் அளவு
7.தேங்காய் துருவல் ⅓ கப்
8.கல் உப்பு தேவையான அளவு
9.உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். பொன்னிற மானதும், கொத்தமல்லி விதைகளை சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். பின்னர் மிளகாய் வற்றல் மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். அனைத்தும் சிவந்து வந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, உப்பு புளி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையலை அரைத்து எடுக்கவும். சூடான சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து, அப்பளம், வடாம் சேர்த்து உண்ண சுவை கூடும்.