ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரை: பாயசம் முதல் லட்டு வரை!

Healthy recipes
Healthy recipes in tamil
Published on

வல்லாரைக் கீரை பாயாசம்

தேவை:

வல்லாரை கீரை- 100 கிராம்

பசும் பால் - கால் லிட்டர்

தேங்காய்த் துருவல் - 1 கப்

பச்சரிசி - 1 ஸ்பூன் (ஊறவைத்துக் கொள்ளவும்)

பாதாம் பருப்பு - 5

வெல்லத் தூள் - 100 கிராம்

ஏலக்காய் - 5 (பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை:

வல்லாரை கீரை, தேங்காய்த் துருவல், பச்சரிசி, பாதாம் பருப்பு ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாலை அடுப்பில் வைத்து காய்ச்சிக்கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தை அடி கனமான பாத்திரத்தில் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்சவேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள வல்லாரை கீரை கலவையை கலந்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் தீயை அணைத்து, சிறிது ஆறிய பின் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் தூள் கலந்து பரிமாற, சுவையான வல்லாரை பாயாசம் தயார்.

வல்லாரை கீரை சாதம்

தேவை:

வல்லாரை கீரை - 1 கட்டு

வடித்த சாதம் - 3 கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

வல்லாரைக் கீரை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இஞ்சி விழுது மற்றும் அரைத்த விழுதை அதில் சேர்த்து கிளறவும். பின் உப்பு, கரம் மசாலா, வதக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கிளறவும். இதனுடன் வடித்த சாதத்தையும் சேர்த்து கிளறிவிடவும். சுவையான வல்லாரை கீரை சாதம் தயார்.

இதையும் படியுங்கள்:
எடை குறைய கொள்ளு உப்புமா: ஆரோக்கியமான காலை உணவு!
Healthy recipes

வல்லாரை கீரை தோசை

தேவை:

வல்லாரை கீரை -1 கட்டு

கோதுமை மாவு - ஒன்றரை கப்

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை -1 கொத்து

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

வல்லாரைக் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை மாவை தோசை மாவுப்பதத்தில் கரைக்கவும். பின் கரைத்த மாவில் நறுக்கிய கீரை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் ஊற்றி மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். சூடான மொறு மொறு வல்லாரை தோசை தயார்.

வல்லாரைக் கீரை லட்டு

தேவை:

உலர்த்திய வல்லாரைக் கீரை பொடி – ½ கப்

வெல்லம் – ½ கப்

எள் – 2 டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
நாக்கு செத்துப்போச்சா? இந்த ஒரு துண்டு ஊறுகாய் போதும், தட்டு சோறும் காலியாகும்!
Healthy recipes

செய்முறை:

வல்லாரைக் கீரை பொடி, எள், வெல்லம் ஆகியவற்றைக் கலந்து கடாயில் போட்டு நன்கு வறுக்கவும். நன்கு வறுத்த பின்னர் இறக்கி வைத்து, ஆறியதும் காய்ச்சிய நெய் சேர்த்து லட்டுபோல உருட்டவும். சுவையான, சத்தான வல்லாரைக்கீரை லட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com