
பூண்டு சட்டினி இடியாப்பம் ரோல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 1 கப்
உப்பு – சிறிது
கொதிக்கின்ற வெந்நீர் – தேவையான அளவு
பூண்டு சட்டினிக்காக
பூண்டு பற்கள் – 10–12
வத்தல் – 4–5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சிறிதளவு இஞ்சி
தேங்காய் மெல்லிய துருவல்_ சிறிதளவு
மேலும்
நெய் அல்லது எண்ணெய் – 1 டீஸ்பூன்
மல்லி இலை – சிறிது
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை: பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி மென்மையாக பிசைக்கவும். இடியாப்ப அச்சில் அழுத்தி, இடியாப்பம் செய்து வேகவைக்கவும். இல்லை என்றால் ரெடிமேட் இடியாப்பத்தை வெந்நீரில் மென்மையாக்கி வடிகட்டி வைக்கலாம்.
பூண்டு சட்டினி தயாரித்தல்: வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வத்தல், இஞ்சி, சிறிதளவு தேங்காய் சேர்த்து வதக்கவும். அது வறுபட்டதும், சிறிது உப்பு சேர்த்து, மிக்சியில் பொடியாக அரைக்கவும். சுவை அதிகமாக வேண்டுமெனில், ½ டீஸ்பூன் வெல்லம் சேர்த்தும் அரைக்கலாம்.
வெந்த இடியாப்பத்தில் பூண்டு சட்டினியை சேர்த்து மென்மையாக கிளறவும். தேவையானால் சிறிது நெய், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கலாம். இது ஒரு மெதுவான காரமான கலவையாக மாறும்.
ரோல் வடிவம்: இடியாப்பத்தையே சிறிய உருளைகளாக வைத்து, மேலே சிறிது சாட்டினி தடவி மெதுவாக உருட்டி ரோல் போல ஆக்கலாம்.
இது டிபன் வகையிலும், சுட சுட சாயங்கால சிற்றுண்டியாகவும் அருமை. பச்சை சட்னி அல்லது தயிர் சாஸ் கூட சிறந்த சேர்க்கை.
ஸ்பைசி விரும்புவோருக்கு இந்த சமைப்பு மிக அருமை!
வாழைப்பழ பனீர் பால் கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை _ ½ கப்
பால் _ 1½ கப்
வாழைப்பழம் _ 1 (அரைத்து மசித்தது)
துருவிய பனீர் _ ¼ கப்
சர்க்கரை _ ¼ கப்
நெய்_ 2-3 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி _ ¼ டீஸ்பூன்
முந்திரி/பாதாம் _ சிறிது
மில்க் மெய்ட் _ 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ 4-5 நூல்கள் (விரும்பினால்)
செய்முறை: ஒரு பானில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி ரவையை பொன்னிறம் ஆகும் வரை மிதமான தீயில் வறுக்கவும். இதன் வாசனை கமழும் வரை வறுத்துவிட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும். விருப்பினால் குங்குமப்பூவும் இப்போது ஊறவைக்கலாம். வாழைப்பழத்தை நன்கு மசித்து, பாலை கொதிக்கும் போதே சேர்க்கவும்.
அதை சிறிது நேரம் கிளறி பழத்தின் வாசனையை இழக்கச் செய்யவும். கொதிக்கும் பழ–பால் கலவையில், மெதுவாக ரவையை தூவி கிளற வேண்டும். கட்டி படாதவாறு தொடர்ந்து கிளறவேண்டும். ரவை வெந்து மிருதுவாக ஆகும்போது சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை உருகும் போது, துருவிய பனீரும் சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்க்கவும். ஏலக்காய் பொடியும் சேர்த்து கிளறவும். விருப்பினால் சிறிது மில்க் மெய்ட் சேர்க்கலாம்.
சூடாகவும் அல்லது சூடு தணிந்ததும் இறங்கி சற்று குளிர்ச்சியாகவும் பரிமாறலாம். குழந்தைகளுக்காக சிறிய பந்தாக உருட்டியும் தரலாம். இது ஒரு சிறந்த Energy Sweet Snack ஆகும்.