ஆரோக்கியம் தரும் ரெசிபிகள்: தயிர் ஓட்ஸ் மீல் - கொண்டைக்கடலை பன்னீர் ஸ்டிர் ஃபிரை!

Healthy recipes
Healthy recipes
Published on

ரோக்கியம் தரும் ரெசிபிகள்: தயிர் ஓட்ஸ் மீல் - கொண்டைக்கடலை பன்னீர் ஸ்டிர் ஃபிரை!

ஓட்ஸ் மீலுடன் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் தயிர் ஓட்ஸ் மீல் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும். அதன் ரெசிபி மற்றும் ப்ரோடீன் சத்து மிகுந்த கொண்டைக்கடலை பன்னீர் ஸ்டிர் ஃபிரை ரெசிபி இங்கே:

தயிர் ஓட்ஸ் மீல் ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.நசுக்கிய (pressed) ஓட்ஸ் 1 கப்

2.தண்ணீர் 2½ கப்

3.தயிர் 1 கப்

4.பால் ½ கப்

5.உப்பு தேவையான அளவு

6.துருவிய கேரட் ¼ கப்

7.துருவிய வெள்ளரிக்காய் ¼ கப்

8.நறுக்கிய மல்லி இலைகள் 2 டேபிள் ஸ்பூன்

9.எண்ணெய் 1 டீஸ்பூன்

10.கடுகு ½ டீஸ்பூன்

11.உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

12.கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்

13.காய்ந்த சிவப்பு மிளகாய் 1

14.நறுக்கிய பச்சை மிளகாய் 1

15.பொடிசா நறுக்கிய இஞ்சி 1 டீஸ்பூன்

16.கறிவேப்பிலை 1 இணுக்கு

17.பெருங்காயம் 1 சிட்டிகை

செய்முறை:

2½ கப் தண்ணீரில் ஒரு கப் ஓட்ஸைப் போட்டு, மிதமான தீயில் 8-10 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். வெந்த ஓட்ஸை ஒரு ஸ்பூனால் அமுக்கி மசிக்கவும். பின் அதனுடன் பால் மற்றும் தயிரை நன்கு அடித்து (whisk) சேர்த்து ஒன்றாகக் கலந்துவிடவும். பிறகு துருவிய கேரட், வெள்ளரிக்காய், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் கொத்தமல்லி

இலைகளையும் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றவும். சூடானதும் கடுகு சேர்த்து, அது வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பிசைந்து வைத்த ஓட்ஸ் சாதத்தில் கொட்டவும். ஆரோக்கியம் நிறைந்த தயிர் ஓட்ஸ் மீல் தயார்.

இதையும் படியுங்கள்:
பசியைத் தூண்டும் இஞ்சி தனியா சூப் மற்றும் சத்தான பட்டாணி பூண்டு சூப் ரெசிபிகள்!
Healthy recipes

கொண்டைக்கடலை பன்னீர் ஸ்டிர் ஃபிரை ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.ஊற வைத்து வேக வைத்த கொண்டை கடலை ½ கப்

2.சதுர வடிவில் நறுக்கிய பன்னீர் துண்டுகள் ¼ கப்

3.நறுக்கிய மஷ்ரூம், புரோக்கொல்லி, குடை மிளகாய்

கேரட் போன்றவற்றில் ஏதாவது இரண்டு - ½ கப்

4.நறுக்கிய வெங்காயம் 1 டேபிள் ஸ்பூன்

5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்

6. உப்பு, மிளகுத் தூள், ஒரகானோ, சோயா சாஸ் தேவையான அளவு.

7.எண்ணெய் தேவையான அளவு.

8.பச்சை மிளகாய் 2

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும். தீயை பெரிதாக வைத்து நறுக்கிய காய் கறிகளை சேர்த்து நன்கு டாஸ் (toss) செய்து வேகவிடவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்துவிடவும். அதனுடன் கொண்டை கடலை, பன்னீர் சேர்த்துக்கலந்து, சிறிது ஒரகானோ, உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்த்துக்கிளறி இறக்கவும். சுவையான, ப்ரோடீன் சத்துமிகுந்த கொண்டைக்கடலை பன்னீர் ஸ்டிர் ஃபிரை ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com