ridge gourd samayal tips
healthy samayal tips

இனிக்கும் பிஞ்சு பீர்க்கங்காயில் காரசட்னியும் இனிப்புகூட்டும் செய்வோமா?

Published on

பொதுவாக பசுமை நிறத்தில் உள்ள காய்கறிகள் அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்கும். லேசான இனிப்பு சுவைகொண்ட நாட்டுக்காயான பீர்க்கங்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளத்ல் ஏராளமான நலன்களைப் பெறலாம். உடல் சூடு, எடை பராமரிப்பு, சருமப் பொலிவு, கண் பார்வை, நீரிழிவைக் கட்டுப்படுத்த, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என பல வழிகளில் பீர்க்கங்காய் உதவுகிறது.

பீர்க்கங்காய் மட்டுமல்ல. பீர்க்கங்காய் தோலும் சத்தும், பயனுள்ளது என்பது தெரியுமா? பீர்க்கங்காய் தோலில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் என பல சத்துக்கள் உள்ளதால் அதை தூக்கி எறியாமல் வைத்தும் துவையல் சட்னி என செய்து பயன்படுத்தலாம். இதோ உங்களுக்காக பீர்க்கங்காய் ரெசிபிகள் இங்கு.

பீர்க்கங்காய் சட்னி

தேவை:

பிஞ்சான பீர்க்கங்காய்- 2 (சிறியது) உளுத்தம் பருப்பு - 1டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்- 4 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் -சிறிது

காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3

உப்பு - தேவைக்கு

எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பீர்க்கங்காயை தோலுடன் நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் அதே வாணலியில் நறுக்கிய பீர்க்கங்காய் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும். வறுத்தவற்றுடன் காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு சுற்றி வதக்கிய பீர்க்கங்காய் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு சுற்று விட்டு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
சுவையான ‘பீர்க்கங்காய் பால் கூட்டு’ - வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
 ridge gourd samayal tips

அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த பீர்க்கங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். தயிருக்கு சைட் டிஷ் ஆக உபயோகிக்கலாம். சூப்பராக இருக்கும்.

பீர்க்கங்காய் தோல் சட்னி

பீர்க்கங்காயை பொரியலாக செய்யும்போது சீவும் தோலை நன்கு கழுவி இதே முறையில் சிறிது புளி மட்டும் கூடுதலாக சேர்த்து தோலுடன் மற்ற பொருள்களை வதக்கி மிக்சியில் அரைத்து ருசியான சட்னி செய்யலாம். தேவையெனில் கடுகு மட்டும் தாளிக்கலாம்.

பீர்க்கங்காய் பிஞ்சு பால் கூட்டு

தேவை:

பிஞ்சு பீர்க்கங்காய்- 2

வெல்லம் - 50 கிராம்

தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்

பால் - சிறிய கப் அல்லது தேவைக்கு

உப்பு- சிறிதளவு

தாளிக்க எண்ணெய் -1 ஸ்பூன்

சீரகம் -1/4 டீஸ்பூன்

செய்முறை:

பிஞ்சு பீர்க்கங்காய்களை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு பாலும் நீரும் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும். பின்னர் தேங்காயை அரைத்து அதனுடன் கலந்து பொடித்த வெல்லம், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும். ஒரு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் காய்ந்த எண்ணெயில் சீரகம், கருவேப்பிலை போட்டு அந்தக் கூட்டில் கொட்டி மூடிவைக்கவும். இனிப்பும் சீரக சுவையும் இந்த கூட்டில் கலந்து இருக்கும் என்பதால் சூடான சாதத்துடன் போட்டு சாப்பிடுவதற்கு சூப்பராக சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான தயிரில் வித்தியாசமான ரெசிபிகள் நான்கு!
 ridge gourd samayal tips
logo
Kalki Online
kalkionline.com