வேற லெவல் சுவையில் நான்கு வகை வெண்டைக்காய் ரெசிபிகள்!

healthy samayal recipes
Tasty Okra Recipes
Published on

வெண்டைக்காய் சாதம் 

தேவை:

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்

வெண்டைக்காய் - 100 கிராம் 

சின்ன வெங்காயம் - 50 கிராம் 

கெட்டியான புளிக்கரைசல் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை 

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 

கடலை பருப்பு - 1 டீஸ்பூன் 

முந்திரி பருப்பு - 10 

கடுகு - 1 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

வெங்கயாயம், வெண்டைகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு,  சூடானதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

வெண்டைக்காய் வதங்கிய உடன் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கிளறவும்.

மற்றொரு பாதிரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி சேர்க்கவும் பிறகு அதில் இந்த வெண்டைக்காய் கலவையை சேர்க்கவும் அதனுடன் வடித்த சாதத்தை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கிளறவும். சூடான, சுவையான வெண்டைகாய் சாதம் ரெடி.

வெண்டைக்காய் வறுவல்

தேவை:

வெண்டைக்காய் : கால் கிலோ

மிளகாய்த்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கேற்ப

கடுகு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

கொத்துமல்லி இலை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவைக்கேற்ப 

இதையும் படியுங்கள்:
பழங்கால சேனைக்கிழங்கு குழம்பும், பாட்டி ஸ்டைல் திருவிழா காய்கறி குழம்பும்..!
healthy samayal recipes

செய்முறை:

வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போடவும். கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வதக்கவும். பிறகு வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். காய் பாதி வதங்கியுதும் அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வதக்கவும்.பின்னர் அரிசி மாவை அதன் மேல் சிறிது சிறிதாகத் தூவி வதக்கவும். காய் நன்றாக வதங்கியதும் இறக்கி வைக்கவும். மொறு மொறு வெண்டைக்காய் வறுவல் ரெடி.

வெண்டைக்காய் தோசை

தேவை: 

பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்டைக்காய் - 8, 

பெருங்காயத்தூள் - சிறிதளவு, 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய்களை  பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். அதன்பிறகு தோசைக் கல்லில் மாவை ஊற்றி, தோசகளாக வார்த்து எடுக்கவும். வித்தியாசமான, சத்தான தோசை இது.

வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி

தேவை:

வெண்டைக்காய் – கால் கிலோ, 

வெல்லம் – 50 கிராம், 

புளி – சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்.

இதையும் படியுங்கள்:
பிரண்டை தொக்கும், கையேந்தி பவன் கார சட்னியும்..!
healthy samayal recipes

செய்முறை:

வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். சுவையான வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com