
செய்யத் தேவையான பொருட்கள்:
கருப்பு சுண்டல் - ஒரு கப்
மைதா ரெண்டு - டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -கைப்பிடி அளவு
மல்லித்தழை- கைப்பிடி அளவு நறுக்கியது
வெள்ளை எள் - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகு- அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன்
பூண்டு - ஆறு பற்கள்
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
கருப்பு சுண்டலை கழுவி நன்கு ஊறவைத்து நீரை வடித்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் மைதா, வெங்காயம், மல்லித்தழை, சீரகம், மிளகு, உரித்த பூண்டு பற்கள், மிளகாய்த்தூள் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, இந்த கலவையை சிறிய வடைகளாக தட்டி எள்ளில் புரட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நல்ல புரோட்டீனை அள்ளித் தரும் சத்தான வடை இது.
தேங்காய் சீடை
பற்களுக்கு உறுதியைத்தரும் அதே நேரத்தில், சட்டென்று செய்து அசத்திவிடக்கூடிய ஒரு இனிப்புப் பண்டம் இந்தத் தேங்காய் சீடை. பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் செய்து சுவைக்கலாம்.
செய்யத் தேவையான பொருட்கள்:
பதப்படுத்திய பச்சரிசி மாவு -ஒரு கப்
வெல்லத் துருவல் - அரை கப்
தேங்காய் துருவல் வறுத்தது- ரெண்டு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி – சிறிதளவு
வறுத்த எள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தைப் பாகு காய்ச்சி அதை பச்சரிசி மாவில் ஊற்றி தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, எள் அனைத்தையும் மாவுடன் சேர்த்து நன்கு கிளறவும். மாவு நன்றாக ஆறிய உடன் சின்னச் சின்ன உருண்டைகளாகத் திரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சட்டென்று செய்து அசத்திவிடலாம். சில பதார்த்தங்களை பற்களால் கடித்து சாப்பிடுவது பற்களுக்கு உறுதியைத் தரும். அதில் ஒன்று சீடை.