பாரம்பரிய சுவையில் அரிசி மாவு மோர்க் களி மற்றும் ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!

Healthy snacks recipes
Healthy snacks recipes
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

அரிசி மாவு இனிப்பு பூரி

தேவை:

பச்சரிசி - 2 தம்ளர்,

வெல்லம் - முக்கால் கிலோ,

குங்குமப்பூ - சிறிது,

எண்ணெய் - ஒரு கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு, நெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சரிசியை களைந்து நீரை வடித்து, உலர்த்தி, மாவாக்கி, சலித்துக் கொள்ளவும். அந்த மாவில் எண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிகளாக இட்டுக்கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி, கம்பி பதம் வரும்போது, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி வைக்கவும். வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும், பூரிகளை போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு வெல்லப்பாகை போட்டு ஊறவிடவும். ஊறியதும், சுவையான அரிசி மாவு இனிப்பு பூரி தயார்.

அரிசி மாவு மோர்க் களி

தேவை:

அரிசி மாவு - ஒரு கப்

மோர் - 1 கப்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 1

கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்கும் 'கொள்ளு மசியல்' - தஞ்சாவூர் ஸ்பெஷல் 'டாங்கர் பச்சடி'! செய்வது எப்படி?
Healthy snacks recipes

செய்முறை:

அரிசி மாவை வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்த மோரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாயை வதக்கி, ஊறிய அரிசி மாவை கொட்டி கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான அரிசி மாவு மோர்க் களி தயார்.

அரிசி மாவு கார உருண்டை

தேவை:

அரிசி மாவு - அரை கப்

உப்பு - தேவையான அளவு

வரமிளகாய் - 4

பெரிய வெங்காயம் - ஒன்று

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
உடல் எடையை மளமளவென குறைக்கணுமா? 10 நிமிஷத்துல ரெடியாகும் 'வெஜிடபிள் மசாலா ஓட்ஸ்'!
Healthy snacks recipes

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயில் அரிசி மாவில் சேர்த்து தண்ணீர் கலந்து உப்பும் கலந்து மாவு போல ஆகும் வரை கிண்டி வேகவைக்கவும்.

பின்பு அதை சிறிது சிறிதாக உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதை இட்லி சட்டியில் வைத்து வேகவைக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு, கடலைப்பருப்பு சேர்க்கவும். கடலைப் பருப்பு நன்றாக வறு பட்டவுடன் சிறிது சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

இதற்குத் தேவையான உப்பும் சேர்க்கவும். நன்றாக இவை அனைத்தும் வறுபட்டவுடன் வேகவைத்த அரிசி மாவு உருண்டையை இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து இறக்கவும். சுவையான கார அரிசி மாவு உருண்டை ரெடி.

logo
Kalki Online
kalkionline.com