

கற்பூரவள்ளி இலைத் தொக்கு
தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி இலைகள் – 2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 15 பல்
புளி – ஒரு எலுமிச்சை பழ அளவு
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
மல்லி விதைகள் – ¼ கப்
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கற்பூரவள்ளி இலைகளை காம்பு நீக்கி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் புளி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின் மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி விதைகள், மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள கற்பூரவள்ளி இலையையும் உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி வைக்கவும். சூடான சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும்.
தினசரி செய்யும் ரசத்திற்கு கூட ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
கற்பூரவள்ளி இலை சூப்
தேவையான பொருட்கள்:
கற்பூரவள்ளி இலைகள் – 10 no
பூண்டு – 2 பல்
மிளகுத்தூள் – ¼ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்த கற்பூரவள்ளி இலைகளை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீர் ஒரு டம்ளராக சுண்டும் வரை கொதிக்கவிட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். இறக்கி அதனுடன் உப்பு, வெண்ணெய் கலந்து, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும். வாரம் இருமுறை குடித்தால் சளி, இருமல் குணமாகும்.