உங்களுக்காக சில அற்புதமான சமையல் டிப்ஸ்கள் இதோ!

Samayal tips...
Samayal tips...
Published on

சிப்ஸ்க்கு உருளைக்கிழங்கு சீவி மஞ்சள் பொடியும் உப்பம் கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து விட வேண்டும் பின்பு துணியில் துடைத்து விட்டு வறுத்தால் நல்ல நிறமும் மொறுமொறுப்பும் கிடைக்கும்.

பீன்ஸ் பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் இயல்பான நிறம் கிடைக்கும் 

காளானை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும் நனைந்த துணி அல்லது சுத்தமான பிரஷ் மூலம் சுத்தப்படுத்தலாம் குளிர்ந்த நீரில் கழுவி காய்ந்த டவலால் துடைத்தெடுத்த பிறகு சமையல் செய்ய வேண்டும்.

பாதாம் பருப்பின் தோலை நீக்குவதற்கு அதனை இருபது நிமிடம் சுடுநீரில் ஊற வைத்தால் போதும் பின்பு தோலை எளிதாக நீக்கிவிடலாம்.

சர்க்கரை டப்பாவிற்குள் மூன்று அல்லது நான்கு கிராம்பு துண்டுகளை போட்டு வைத்தால் எறும்பு அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காது.

தக்காளியை அதன் தேவைக்கு தக்கபடி பார்த்து வாங்க வேண்டும் அதிக தசைப்பகுதி உள்ள தக்காளி சாலட்டிற்கு ஏற்றது . பழுத்த தக்காளியாக ரசத்திற்கும் ஜூஸிற்கும் அதிக சாறு உள்ள தக்காளியை பார்த்து வாங்க வேண்டும்.

தோசை மிருதுவாக வர வேண்டுமா? தோசைக்கு மாவு அரைக்கும்போது வேகவைத்த அரிசி கொஞ்சம்  அதில் சேருங்கள் தோசை மிருதுவாக இருக்கும்.

மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயகட்டியை போட்டு வைத்தால் போதும் மிளகாய்த்தூள் நீண்ட நாள் காரம் மணம் மாறாமல் இருக்கும்.

வெஜிடபிள் கட்லெட் தயாரிக்கும்போது சிறிதளவு தேங்காய் சேருங்கள் கட்லெட் அதிக ருசி தரும்

ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேருங்கள் ஆப்பம் சீக்கிரம் காய்ந்து போகாது.

பளபளப்பான தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அந்த இடத்தில் சிறிதளவு அரிசி மாவு அல்லது வேறு ஏதாவது தானியமாவை  சிறிது நேரம் கழித்து பேப்பரால் அந்த இடத்தை துடைத்து விட்டால் எண்ணெய் தன்மையை நீங்கிவிடும்.

உளுந்து வடைக்கு மாவு தயாரிக்கும் போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும் முறுமுறுப்பாக இருக்கும் அதிக எண்ணெய் செலவாகாது.

பாம்பே ரவை எனப்படும் ரவையில்தான் உப்புமா தயாரிப்போம். இஞ்சி பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் கறிவேப்பிலை போன்றவைகளை நெய்யில் போட்டு தயாரிக்கும் உப்புமாவை மிதமான சூட்டில் சாப்பிடுவது பிரமாதமான சுவையை தரும்.

சமையல் எண்ணெயை சூடாக்கும்போது சில நேரங்களில் திடீரென்று புகை கிளம்பும் புகை ஏற்படாமல் இருக்க எண்ணெயில்  சிறிதளவு புளியை போட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தயக்கமும் பயமும்தான் நம் முதல் எதிரி!
Samayal tips...

பேப்பர் ரோஸ்ட் தயாரிக்க மாவில் கவனம் செலுத்த வேண்டும் 4:1 என்ற கணக்கில் உளுந்து சேர்த்து மாவு தயாரிக்க வேண்டும்.

தேங்காய்பால் பிழிந்து எடுத்த பின்பு அந்த துருவலை வைத்து துவையல் அரைக்கலாம் காய்ந்த மிளகாய் பெருங்காயம் உளுத்தம்பருப்பு பருப்பு போன்றவைகளை வறுத்து புளியும் சேர்த்து அரைக்க வேண்டும் உப்பும் கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உடைத்து வைத்த தேங்காய் காய்ந்து போனால் அதில் பாலை ஊற்றி பத்து நிமிடம் வைத்திருக்க வேண்டும் பின்பு எடுத்து பயன்படுத்தினால் புதியது போல இருக்கும். 

கீரை இலையையும் இளந்தண்டையும் சேர்த்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும் தண்டு வேகாமல் இருக்கும் முதலில் தண்டை வேகவைத்து விட்டு பின்பு இலையை கலந்து வேகவைக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com