எளிய முறையில் நோய்களைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்!

healthy foods
Home remedies!
Updated on

வாதம் சம்பந்தமான நோய்களை அவரைக்காய் போக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பிஞ்சு அவரைக்காயை சமைத்து உண்ண உடல் ஆரோக்கியம் மேம்படும். ரத்த கொதிப்பை குறைக்கும் தன்மை இதற்கு உண்டு.

சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள மார்புச்சளி, கபத்தை போக்குவதோடு வயிற்றுப் பூச்சிகளையும் கொல்லும்.

சிறு பசலைக் கீரையை சமைத்து உண்ண மலத்தை இளக்கி வெளியேற்றும். உடல் சூடு தணியும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.

வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க வாயுத்தொல்லை நின்று விடும். மன இறுக்கம், படபடப்பு குறையும்.

ஓமம், மிளகு, உப்பு இவற்றை பொடித்து வைத்துக் கொண்டு காலை வேளைகளில் சாப்பிட்டு வர, செரிமானக் கோளாறுகள் நீங்கும்.

ஊறவைத்த அத்திப்பழம் பசி எடுக்காத குழந்தைகளுக்கும் பசி எடுக்க வைக்கும்‌. மாதவிடாய் பிரச்னைகளை நீக்கும் சக்தி இதற்கு உண்டு.

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.

முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட இருமல் நிற்கும்.

மிளகு 3,4 உடன் வெல்லம் சேர்த்து சாப்பிட இருமல், நீர்க்கோவை குணமாகும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான சிறுதானிய அடை - செய்முறை விளக்கம்!
healthy foods

அருகம்புல் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து அருந்த மூச்சிரைப்பு குணமாகும்.

இதயம் பலம் பெற, மார்புவலி தீர 200மிலி தண்ணீரில் 2-3 செம்பருத்தியை போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

வில்வ இலையை காய்ச்சி குடிக்க காய்ச்சல் குணமாகும்.

உணவில் வாழைத்தண்டை அடிக்கடி சேர்த்துக்கொள்ள குடல் இயக்கம் மேம்படும்.இரத்தக்கொதிப்பு மட்டுப்படும்.

ஓமம், பனங்கற்கண்டு, மிளகு இவற்றை பாலில் காய்ச்சி குடிக்க சளி குறையும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து சாப்பிட வயிற்று வலி, வயிற்று போக்கு குறையும்.

உலர்திராட்சை ஊறிய தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் வராததோடு உடல் வளர்ச்சி மேம்படும்.

வெந்தயம் ஊறிய நீரை குடித்து வர நீரிழிவு கட்டுப்படும். உடல் சூடு குறையும்.

இவை அனைத்தும் நான் வீட்டில் செய்து கொடுத்து பலன் பெறுவது.

logo
Kalki Online
kalkionline.com