
இன்றைக்கு சுவையான வாட்டர்மெலன் ரைஸ் மற்றும் சில்லி கார்லிக் பொட்டெட்டோ ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
வாட்டர்மெலன் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்.
வாட்டர்மெலன் ஜூஸ்-2 கப்.
அரிசி-1 கப்.
சில்லி பிளேக்ஸ்-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1 தேக்கரண்டி. சீரகத்தூள்-1/4 தேக்கரண்டி.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
தாளிக்க,
எண்ணெய்-தேவையான அளவு.
கருஞ்சீரகம் -1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
பூசணி விதை-1 தேக்கரண்டி.
வாட்டர்மெலன் ரைஸ் செய்முறை விளக்கம்.
முதலில் வாட்டர்மெலனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து ஜூஸ் 2 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் 1 கப் அரிசியை நன்றாக அலசிவிட்டு சேர்த்துக்கொள்ளவும்.
இதில் 2 கப் வாட்டர்மெலன் ஜூஸை சேர்த்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு, சில்லி பிளேக்ஸ் சிறிதளவு, சீரகத்தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது இதை மூடிப்போட்டு நன்றாக வேகவைக்கவும். அரிசி நன்றாக வாட்டர்மெலன் ஜூஸில் வெந்ததும் இறக்கவும். இப்போது தாளிக்க எண்ணெய்யில் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி, பூசணி விதை 1 தேக்கரண்டி, மஞ்சள்தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து ரைஸின் மீது அலங்கரிக்க சேரத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான வாட்டர்மெலன் ரைஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சில்லி கார்லிக் பொட்டெட்டோ செய்ய தேவையான பொருட்கள்.
உருளைக்கிழங்கு-2
சோளமாவு-1 கப்.
பூண்டு-5
ஸ்பிரிங் ஆனியன்-சிறிதளவு.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
சில்லி சாஸ்-1 தேக்கரண்டி.
உப்பு-தேவையான அளவு.
சில்லி கார்லிக் பொட்டெட்டோ செய்முறை விளக்கம்.
முதலில் 2 உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும். இதில் சோளமாவு 1 கப் சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும்.
இப்போது அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிவிட்டு பாட்டிலை வைத்து அதன் மீது அழுத்தம் கொடுத்தால் மஸ்ரூம் போன்ற வடிவம் கிடைத்துவிடும்.
இதை இப்போது கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இப்போது இதை குளிர்ந்த நீரில் மாற்றிவிடவும்.
ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய பூண்டு 5, ஸ்பிரிங் ஆனியன் சிறிதளவு, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சோயா சாஸ் 1 தேக்கரண்டி, வெள்ளை எள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, கொதிக்க வைத்த எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கலந்துவிடவும். இதில் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கலந்துவிட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான சில்லி கார்லிக் பொட்டெட்டோ தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.