கொத்து தோசை மற்றும் பூண்டு சட்னி ரெசிபி: வீட்டிலேயே சுவையாக தயார் செய்யலாம்!

Kothu dosa and garlic chutney
Samayal tips...
Published on

ன்றைக்கு டேஸ்டியான கொத்து தோசை மற்றும் பூண்டு சட்னி ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

கொத்து தோசை செய்ய தேவையான பொருட்கள்.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-1

தக்காளி-1

கருவேப்பிலை-சிறிதளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

முட்டை-1

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி- சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

கொத்து தோசை செய்முறை விளக்கம்.

முதலில் வெங்காயம் 1, தக்காளி 1, கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 1 ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் சிறிதளவு விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கிவிட்டு அதில் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது இதில் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிய பிறகு முட்டை 1 சேர்த்து கலந்துவிட்டு தோசை 1 ஐ பிய்த்து போட்டு இத்துடன் கலந்து நன்றாக கொத்திய பிறகு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கொத்து தோசை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பூண்டு சட்னி செய்ய தேவையான பொருட்கள்.

பூண்டு-20

சாம்பார் மசாலா-4 தேக்கரண்டி.

மல்லித்தூள்-2 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
சுவையான கருவேப்பிலை குழம்பு மற்றும் கீரை தொக்கு செய்வது எப்படி?
Kothu dosa and garlic chutney

பூண்டு சட்னி செய்முறை விளக்கம்.

முதலில் 20 பூண்டை தோல் உரித்து நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் மல்லித்தூள் 2 தேக்கரண்டி, சாம்பார் மசாலா 4 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு தேவையான அளவு உப்பு  சேர்த்துக்கொண்டு நறுக்கி வைத்த பூண்டை சேர்த்து வதக்கிய பிறகு தண்ணீர் சிறிது ஊற்றி வேகவைக்கவும். நன்றாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி சாதம், தோசை, இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com