சூடான சுவையான ஹாட் சாக்லேட் வீட்டிலேயே செய்யலாமே! 

Hot Chocolate
Hot Chocolate
Updated on

குளிர் காலங்களிலும், மழை நாட்களிலும் சூடாக ஏதாவது குடிப்பது மிகவும் இதமாக இருக்கும். அப்படிப்பட்ட பானங்களில் ஹாட் சாக்லேட் செய்து அருந்துவது பலருக்கும் விருப்பமான ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த பானம், எளிமையான செய்முறையைக் கொண்டது. தரமான சாக்லேட் மற்றும் சில எளிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சுவையான ஹாட் சாக்லேட் தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • பால்: 2 கப் 

  • சாக்லேட்: 50 கிராம் (டார்க் சாக்லேட் அல்லது மில்க் சாக்லேட்)

  • சர்க்கரை: 2 தேக்கரண்டி

  • வெனிலா எசன்ஸ்: 1/2 தேக்கரண்டி

  • கார்ன் ஸ்டார்ச்: 1 தேக்கரண்டி

  • உப்பு: ஒரு சிட்டிகை

செய்முறை:

 முதலில், சாக்லேட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் சூடாக்கவும்.

பால் சூடானதும், நறுக்கிய சாக்லேட்டை சேர்க்கவும். சாக்லேட் கரையும் வரை கிளறவும். பின்னர், சர்க்கரை மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
பிரட் கார்ன் போண்டாவும் ஹெல்தி கார்ன் சூப்பும் செய்வோமா?
Hot Chocolate

கார்ன் ஸ்டார்ச் சேர்ப்பதாக இருந்தால், சிறிது குளிர்ந்த பாலில் கார்ன் ஸ்டார்ச்சை கரைத்து, சூடான பாலில் சேர்க்கவும். இதை, நன்கு கிளறி, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்தால் வேற லெவல் சுவையில் ஹாட் சாக்லேட் தயார்.‌

தரமான சாக்லேட்டை பயன்படுத்தினால், சாக்லேட் சூடாக மிகவும் சுவையாக இருக்கும். சர்க்கரையின் அளவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். வெனிலா எசன்ஸ் சேர்ப்பதால் சாக்லேட் சூடாக மேலும் சுவையாக இருக்கும். திக்கான சாக்லேட் வேண்டுமென்றால், கார்ன் ஸ்டார்ச் சேர்க்கலாம். சாக்லேட் சூடாக தயாரிக்கும் போது, பால் அடி பிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் கொழுக்கட்டை-பான் லட்டு செய்யலாம் வாங்க!
Hot Chocolate

ஹாட் சாக்லேட் தயாரிப்பது மிகவும் எளிமையானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி அருந்துவார்கள். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகள் மற்றும் குறிப்புகளை பயன்படுத்தி, வீட்டிலேயே சுவையான ஹாட் சாக்லேட் தயாரித்து மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com