சூடான சாதம், சப்பாத்தி, பூரிக்கு ருசியான குடைமிளகாய் மசாலா!

குடை மிளகாய்
குடை மிளகாய்www.youtube.com

குடமிளகாய் மசாலா!

குடை மிளகாய் 2 

வெங்காயம்1

இஞ்சி ஒரு துண்டு

பூண்டு 4

தனியா தூள் 1 ஸ்பூன்

கார பொடி.   1/2 ஸ்பூன்

மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்

சீரகத்தூள்  1/2 ஸ்பூன்

வேர்க்கடலை 1 கைப்பிடி

கடலை மாவு 2 ஸ்பூன்

உப்பு தேவையானது

பச்சை மிளகாய் 2

பெரிய துண்டுகளாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு, நசுக்கிய இஞ்சி, பூண்டு, தனியாத் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கடலை மாவு, தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்தது அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கடுகு ஒரு ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், பச்சை மிளகாய் கீறியது 2 சேர்த்து கடுகு பொரிந்ததும் கலந்து வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து நன்கு கிளறி விடவும். தட்டைப் போட்டு மூடி இரண்டு நிமிடம் வைக்கவும். இப்பொழுது அதிகம் புளிப்பில்லாத கெட்டி மோர் ஒரு கப் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்து சேர்ந்து வரும்போது அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும். மிகவும் ருசியான குடைமிளகாய் மசாலா தயார். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

அடிக்கிற வெயிலுக்கு குளுகுளு கம்மங்கூழ்!

அடிக்கிற வெயிலுக்கு குளுமையான கம்பு கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கம்பு கால் கிலோ 

உப்பு தேவையானது 

கெட்டி தயிர் ஒரு கப் 

தொட்டுக்கொள்ள: 

மோர் மிளகாய் வறுத்தது

சுண்டைக்காய் வத்தல் வறுத்தது மாங்காய் ஊறுகாய்  சாம்பார் வெங்காயம் சிறிது.

கம்மங்கூழ்
கம்மங்கூழ்

கம்பு கால் கிலோ எடுத்து இரண்டு மூன்று முறை நன்கு கழுவி 20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு மிக்ஸியில் நைஸ் ரவையாக அரைத்து எடுக்கவும். இரண்டு கப் நீர் விட்டு நன்கு கலந்து வைக்கவும். அடிகனமான உருளி அல்லது வாணலியில் நான்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் கரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து கிளறவும். வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். சாப்பிடும் சமயம் தேவையான அளவு கெட்டி மோராகக் கடைந்த தயிர் சேர்த்து பருக உடலும், வயிறும் நன்கு குளிர்ச்சி அடையும். வெயிலுக்கு ஏற்ற அருமையான கம்பங்கூழ் தயார். இதே முறையில் கேப்பங்கூழையும் தயாரித்துப் பருகலாம்.

இதையும் படியுங்கள்:
Wellness Carnival: மக்கள் நலம் காக்கும் திருவிழா! என்ன? எங்கே? எப்போது? யார் நடத்துவது?
குடை மிளகாய்

இதற்கு தொட்டுக்கொள்ள வறுத்தமோர் மிளகாய், சுண்டைக்காய் வத்தல், தோல் நீக்கிய சாம்பார் வெங்காயம், ஊறுகாய் போன்றவை மிகவும் பொருத்தமாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com