

பன்னீர் மட்டர் மசாலா. இது சப்பாத்தி மற்றும் பூரிக்கு சிறந்த சைடு டிஷ் ஆக இருக்கும். பன்னீர் மட்டர் மசாலா கடைகளில் செய்வதைப் போலவே வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். பன்னீரில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கனிமங்கள் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எலும்புகளின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
பன்னீரை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து பசி எடுக்காமல் உடல் எடைக் குறைப்பிற்கு உதவுகின்றன. மேலும் பன்னீர் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பன்னீர் - 300 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
முந்திரி - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தாளிக்க: பெருஞ்சீரகம், கிராம்பு, பட்டை, அன்னாசிப் பூ - தேவையான அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பன்னீரை ஸ்கொயர் ஷேப்பில் கட் செய்து வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிருதுவாக பொரித்து எடுக்க வேண்டும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் முந்திரி சிறியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும். பின் இதனுடன் தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தக்காளியை நன்கு அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை நன்கு வெந்து வந்தவுடன் தேவையான அளவு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு நீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதித்தவுடன் நாம் வறுத்து வைத்திருந்த பன்னீர், பச்சை பட்டாணி சேர்த்து பத்து நிமிடங்கள் கிளறிய உடன் இறுதியாக மல்லித்தழை சேர்த்து இறக்கவேண்டும். சுவையான கமகமக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பன்னீர் மட்டர் மசாலா தயார். பன்னீர் மட்டர் மசாலா கடைகளில் நாம் வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் வீட்டிலேயே செய்வது மிகுந்த ஆரோக்கியம் உடைவதாக இருக்கும்.
ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த ரெசிபியை உங்கள் டயட்டில் இணைப்பதன் மூலம், பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். எலும்புத் தேய்மானம் மற்றும் செரிமானப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உங்கள் அன்றாட உணவை ஒரு ஹோட்டல் விருந்தாக மாற்றும் ஆற்றல் இந்த ஒரு ரெசிபிக்கு உண்டு.