Fake paneer Vs. Real paneer: கண்டறிவது எப்படி?

Fake Vs Real paneer
Fake Vs Real paneer
Published on

தற்போது பனீர் மிகவும் பிரபலமான உணவாக மாறி வருகிறது. உணவில் புரதத்தித்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பனீரை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால், தற்போது சந்தையில் உண்மையான பனீர் போலவே போலி பனீர் விற்பனை செய்யப்படுகிறது என்பது அதிர்ச்சி தரும் தகவல்; ஆபத்தானதும் கூட. இதை எப்படி கண்டுப்பிடிப்பது? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

பாலை நன்றாக கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு அல்லது வினீகரை சிறிது சேர்க்கும் போது பாலில் உள்ள புரதங்கள் கெட்டி நிலையை அடையும். அதையே பனீர் என்று சொல்கிறோம். இதை வடிகட்டி பயன்படுத்திக் கொள்ளலாம். 

Analogue paneer: பனீரை அப்படியே பாலில் இருந்து தயாரிக்காமல் சில கம்பெனிகள் அதன் விலையை குறைப்பதற்கு அதில் பால் பாதியை வைத்துக்கொண்டு  கொழுப்பிற்கு Hydrogenated fat பாமாயில் போன்றவற்றை சேர்த்து விடுவார்கள். மேலும் கெட்டியாக இருக்க ஸ்டார்ச் சேர்க்கப்படும்.

இதனால் பனீர் விலையில் பாதியில் இந்த Analogue Paneerஐ விற்க முடியும். இப்போது புரிகிறதா? ஏன் பனீர் பட்டர் மசாலாவில் நிறைய பனீர் போடப்பட்டிருக்கிறது; கடைகளில் வாங்கும் பனீர் உணவுகளில் அதன் விலை குறைவாக இருந்தாலும் பனீர் தாராளமாக இருக்கிறது என்று?

இதில் அதிகமாக Hydrogenated fat இருப்பதால் கொலஸ்ட்ராலை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் இதயம் சம்மந்தமான நோய்கள் ஏறடும் அபாயம் உள்ளது. வயிறு சம்மந்தமான பிரச்னைகளான அஜீரணம், பேதி, வாந்தி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

எனவே, புரதத்திற்காக பனீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம் அல்லது நல்ல Branded கம்பெனியில் பனீர் வாங்குவது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் கையில் கட்டாயம் இந்த பொருள் படாதப்படி பார்த்துக்கோங்க!
Fake Vs Real paneer

போலி பனீரை எப்படி கண்டறியலாம் தெரியுமா?

போலி பனீரின் சுவை பாலில் தயாரித்த பனீரின் சுவையைப் போன்று இருக்காது. அதில் பாலின் சுவை சிறிதும் இருக்காது. கடைகளில் இருந்து பனீரை வாங்கும் போது அதில் Analogue அல்லது Imitation போன்ற வார்த்தைகள் இருக்கிறதா? என்பதை பார்த்து தெரிந்துக் கொண்டு வாங்குங்கள்.

போலி பனீரை கைகளால் அழுத்தும் போது சுலபமாக உடைந்துவிடும். இதன் மூலமாக போலி பனீரை சுலபமாக கண்டறியலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com