சுவையில் டாப் டக்கர் இந்த முட்டைகோஸ் குழம்பு!

Cabbage Curry Recipe.
Cabbage Curry Recipe.

இதுவரை முட்டைகோஸ் பயன்படுத்தி விதவிதமாக பொரியல்தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் அதை வைத்து குழம்பு கூட செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? முட்டைக்கோஸ் மற்றும் தேங்காய் அரைத்து செய்யப்படும் இந்த குழம்பு சுவையில் அட்டகாசமாகவும், மதிய உணவுக்கு ஏற்ற உணவாகவுமா நிச்சயம் இருக்கும். 

தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் - ¼ கிலோ 

காய்ந்த மிளகாய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

கடலைப்பருப்பு - 100 கிராம் 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

வெங்காயம் - 1

கடுகு - ½ ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - ½ மூடி

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை 

முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் அதை மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் தேங்காயும் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். 

அதே கடாயில் பின்னர் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
மொறு மொறு வென முட்டைகோஸ் போண்டா செய்யலாமா...!
Cabbage Curry Recipe.

இவை வதங்கியதும் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். முட்டைகோஸ் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது, மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும். 

இந்த கலவை கெட்டியாக்கி கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான முட்டைக்கோஸ் கிரேவி ரெடி. இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com