கேரட் வச்சி 65 செய்யலாமா? புதுசா இருக்கே! 

Carrot 65
Carrot 65
Published on

இதுவரை நீங்கள் எத்தனையோ விதங்களில் 65 செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், கேரட் வைத்து 65 தயாரித்து சாப்பிட்டதுண்டா? கேரட்டை முக்கிய பொருளாகப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும். காரமான மசாலா நிறைந்த இந்த ஸ்நாக், தேநீர் அல்லது குளிர்பானங்களுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இந்தப் பதிவில் கேரட் 65 எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • கேரட்: 300 கிராம் (நறுக்கியது)

  • 65 மசாலா பொடி: 1/4 டீஸ்பூன்

  • இஞ்சி-பூண்டு பேஸ்ட்: 4 டீஸ்பூன்

  • கார்ன் ஃப்ளவர்: 1 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை: சிறிதளவு

  • எண்ணெய்: தேவையான அளவு

  • உப்பு: சுவைக்கு ஏற்ப

  • தண்ணீர்: தேவையான அளவு

செய்முறை: 

முதலில் கேரட்டை நன்கு கழுவி, அதன் தோலை சீவி, வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட், 65 மசாலா பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கான் ஃபிளவர், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மசாலா கேரட்டை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இறுதியாக, அதில் கருவேப்பிலையை தாளித்து சேர்த்து நன்கு கிளறவும். 

இப்போது சூடான கேரட் 65-யை ஒரு சர்விங் பவுலில் போட்டு பரிமாறவும். 

இதையும் படியுங்கள்:
குளிர்காலங்களில் தோல் வறண்டு போகுதா? வீட்டிலேயே இப்படி சோப் தயார் செய்து யூஸ் பண்ணுங்க!
Carrot 65

65 மசாலா பொடி வீட்டிலேயே எளிதாகத் தயார் செய்யலாம். இதற்கு சீரகம், கடுகு, மிளகாய், பூண்டு போன்ற பொருட்கள் தேவைப்படும். கான்பிளவர் கேரட்டை மிருதுவாகவும், பொறுப்பாகவும் வைக்க உதவும். இதன் சுவையை அதிகரிக்க வறுக்கும்போது சிறிதளவு கசகசா சேர்க்கலாம். கேரட் 65-யை பலவிதமான வகைகளில் தயார் செய்யலாம். பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து இவற்றைச் செய்யும்போது சுவை மேலும் சூப்பராக இருக்கும். 

இந்த அட்டகாசமான ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com