

தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - விருப்பத்திற்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி - 10
உப்பு - சுவைக்கு
அரைக்க :
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
ப.மிளகாய் - 3
செய்முறை :
* கொத்தமல்லி, ப.மிளகாயை அரைத்து வைத்துகொள்ளவும்.
* இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிளகை கொரகொரப்பாக தட்டி வைக்கவும்.
* பச்சரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
* குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய், 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிய பின்னர் 4 கப் தண்ணீர் மற்றும் அரைத்த கொத்தமல்லி விழுதையும் சேர்த்து நன்றாக கொதித்த ஆரம்பித்ததும் உப்பு சேர்த்த பின்னர் ஊறவைத்த அரிசி, பருப்பை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 2 விசில் வந்ததும், 5 நிமிடம் மிதமான தீயில் வைத்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
* குக்கரி விசில் போடவுடன் குக்கர் மூடியை திறக்கவும்.
* ஒரு சிறிய கடாயில் 2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி பருப்பை போட்டு வறுத்து பொங்கலில் கொட்டி கிளறி இறக்கினால் கம கம ‘கொத்தமல்லி பொங்கல்’ ரெடி.
* இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பரா இருக்கும்.
கொத்தமல்லியின் பயன்கள்..
தினமும் சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் அவ்வளவு நன்மைகள் இருக்கு. ஆனா இது பல பேருக்கு தெரிவதில்லை. சும்மா சுவைக்காக சமையலில் யூஸ் பண்றதா நினைக்கிறாங்க. ஆனா இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
* தினமும் கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், அது கொழுப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
* இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளன.
* இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, உடலில் உள்ள ‘கெட்ட’ (LDL) கொழுப்பைக் குறைக்கவும் ‘நல்ல’ (HDL) கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவும்.
* கொத்தமல்லி கணைய செல் செயல்பாட்டை மேம்படுத்தி, இன்சுலின் சுரப்பை அதிகரித்து, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* கொத்தமல்லி வலுவான எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பிற தாதுக்களின் நல்ல மூலமாகும், இது ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்.
* கொத்தமல்லி ஒரு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு, சிறுநீரகங்களில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.