சுவையான கோடைக்கால ஸ்பெஷல்: மேங்கோ மஸ்தானி செய்வது இவ்வளவு ஈஸியா?

mango-mastani
mango-mastani
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on

தேவையானவை:

மாம்பழம் - சதைப்

பற்றாக - 1பெரியது

கொழுப்பு சத்து நிறைந்த பால் அல்லது க்ரீம் - 1கப்,

சர்க்கரை - 1டேபிள் ஸ்பூன்,

மாம்பழ ஐஸ்கிரீம் அல்லது வெனிலா ஐஸ்க்ரீம் -2ஸ்கூப்

மேலே அலங்கரிக்க

பாதாம்

பிஸ்தா

முந்திரி - பொடியாக

நறுக்கியது - 1டேபிள்ஸ்பூன்,

செர்ரி - 2அலங்கரிக்க

மாம்பழம் - கொஞ்சம்

செய்முறை :

மிக்ஸியில் மாம்பழம், சர்க்கரை, ஐஸ்க்யூப்ஸ் சேர்த்து நன்கு அடிக்கவும், பின் க்ரீம் சேர்த்து ஒருமுறை அடிக்கவும். பின் அதை டம்ளரில் ஊற்றி (கொஞ்சம் இடம் விட்டு ஊற்றவும்) பரிமாறும் முன் ஐஸ்கிரீம் சேர்த்து மேலே பொடியாக நறுக்கிய மாம்பழம் நட்ஸ் தூவி செர்ரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பால் ஐஸ்... ஈஸியாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்!
mango-mastani

இந்த மாம்பழ சீசனில் ருசியான மாம்பழம் கொண்டு எளிதாக செய்து விடலாம். டேஸ்டியான புனே ஸ்பெஷலான மாம்பழ மஸ்தானி அனைவருக்கும் ஃபேவரிட் ஆகி விடும். நீங்கள் உங்கள் குழந்தைகளை வெல்ல விரும்பினால், அவர்களுக்காக இதை உருவாக்கி மேலும் அவர்கள் ஏங்குவதைப் பாருங்கள். மேலே சென்று, இந்த எளிதான பானத்தை உடனே முயற்சித்துப் பாருங்கள்!

logo
Kalki Online
kalkionline.com