அாிசி வடாம் , குழம்பு வடாம் - இப்படி செஞ்சா ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாது!

Vadagam Recipes
Vadagam Recipes
Published on

1. அாிசி வடாம்

தேவையானவை :

புழுங்கல் அரிசி- ஒரு கிலோ

பச்சை மிளகாய்-12

உப்பு, சீரகம் மற்றும் காயப்பவுடர்- தேவைக்கேற்ப

செய்முறை:

புழுங்கல் அாிசியை மூன்று மணி நேரத்திற்கு மேல் ஊற வைத்து நன்கு களைந்து உப்பு, பச்சை மிளகாய், தண்ணீா் சோ்த்து கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். நன்கு தோசை மாவு பதமாக இருப்பது நல்லது.

அடி கனமான பாத்திரத்தில் நான்கு லிட்டர் தண்ணீா் வைத்து நன்கு தளைத்து கொதி வரும் நிலையில் அரைத்து வைத்துள்ள மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கைவிடாமல் கிளறவும். அத்துடன் சீரகம் காயப்பவுடர் சோ்த்து கிளறவும் கெட்டியாக இருப்பது நல்லது.

பின்னா் கிளறி வைத்த மாவை நன்கு பிசைந்து பிளாஸ்டிக் பேப்பரில் முறுக்கு பட்டை வில்லை அச்சில் போட்டு பிழியவும். முன்று நாட்கள் வெயிலில் காய்ந்த பின் டின்னில் வைத்துக் கொள்ளவும். ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். மனத்தக்காளி வத்தல் குழம்பு வைத்து வடாம் பொாித்து சாப்பிட தேவாமிா்தம் தான் போங்கள்.

2. சாம்பாா் வடாம்

தேவையானவை :

துவரம் பருப்பு- கால் கிலோ

கொண்டை கடலை- 100 கிராம்

கொள்ளு- 100 கிராம்

சீரகம், காயப்பவுடர் கருவேப்பிலை உப்பு- தேவைக்கேற்ப

வத்தல் மிளகாய்-15

செய்முறை:

துவரையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் கொள்ளு, மற்றும் கொண்டைக்கடலையை ஊற வைத்து மிளகாய், உப்பு சோ்த்து கொஞ்சம் தண்ணீா் விட்டு மிக்சியில் கொர கொரப்பாய் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதில் சீரகம், கிள்ளிய கறிவேப்பிலை, காயப்பவுடர், போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் பிளாஸ்டிக் பேப்பரில் கிள்ளி கிள்ளி வைத்து மூன்று நாள் காயவைத்து டின்னில் போட்டு வைப்பது நல்லது.

நல்ல டேஸ்ட்டான ஹெல்த்தியான குழம்பு வடாம் ரெடி. சாம்பாா், பொாிச்ச குழம்பு, வத்தல் குழம்பு வைக்கும் போது குழம்பு வடாத்தினை பொாித்து குழம்பில் போடவும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்குத் தடையாகும் 'சூப்பர்மேன்' பவர்..!
Vadagam Recipes

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com