கச்சோரி சாப்பிட இனி கடைக்கு செல்ல வேண்டாம்! 

Kachori Recipe.
Kachori Recipe.

கச்சோரி எனப்படும் ஒரு வகை உணவு வட இந்தியாவில் மிகவும் பிரபலமாகும். இப்போது இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கிறது. அதன் சுவை உங்களின் சுவை நரம்புகளை நடனமாடச் செய்யும். இந்த உணவு தற்போது கடைகளில் மட்டுமே கிடைத்தாலும், வீட்டிலேயே சுவைமராமல் ஆரோக்கியமாக நாம் செய்ய முடியும். ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தார் போல மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப கச்சோரி சமைக்கப்படுகிறது. இந்த பதிவில் தமிழர்களாகிய நாம் விரும்பும்படி கச்சோரி எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

(இந்த செய்முறை உருளைக்கிழங்கு கச்சேரிக்கானது)

தேவையான பொருட்கள்: 

  1. மாவுக்கு

  • 2 கப் மைதா மாவு

  • கால் கப் ரவை 

  • கால் கப் நெய் 

  • ஒரு சிட்டிகை சமையல் சோடா

  • தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தண்ணீர்

  1. பூரணம் செய்வதற்கு

  • 2 கப் வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு.

  • 1 ஸ்பூன் எண்ணெய் 

  • 1 ஸ்பூன் சீரகம் 

  • 1 ஸ்பூன் கடுகு 

  • 1/2 கப் வெங்காயம் 

  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 

  • 1/2 கப் பச்சை பட்டாணி 

  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள் 

  • 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் 

  • 1 ஸ்பூன் கரம் மசாலா 

  • தேவைக்கு ஏற்ப உப்பு 

  • சிறிதளவு கொத்தமல்லி ததழை 

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, நெய், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அந்த மாவை 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிடுங்கள். 

அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சீரகம், கடுகு, போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது பச்சை பட்டாணி மற்றும் எல்லா வகையான மசாலாக்களையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டிருங்கள். 

பின்னர் பிசைந்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லித்தழை சேர்த்தால் கச்சோரிக்கான பூரணம் தயார். 

இதையும் படியுங்கள்:
பழைய சாதத்தைப் பயன்படுத்தி அக்கி ரொட்டி செய்யலாம் வாங்க!
Kachori Recipe.

பூரணம் தயாரித்த பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, சிறிய வட்ட வடிவில் உருட்டி, அதன் மையத்தில் பூரணத்தை நிரப்பி ஒரு தட்டையான பந்து போல விளிம்புகளை மூடி மடியுங்கள். 

அதன் பிறகு இவற்றை வறுத்தெடுக்க கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கச்சோரிகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதற்கு பேப்பர் டவலில் வைக்கலாம். 

இறுதியில் இவற்றை புதினா சட்னி அல்லது புளி சாசுடன் சேர்த்து சூடாக சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை நிச்சயம் கச்சேரியை வீட்டில் முயற்சித்து பார்த்து, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com