2 in 1 Recipe: கமகமக்கும் கொத்தமல்லி மாங்காய் சாதமும், சுவையான தாகி பிரிஞ்சாலும்!

இன்று சூப்பரான கொத்தமல்லி மாங்காய் சாதம், தாகி பிரிஞ்சால் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
Manga Malli Sadam and dahi brinjal
Manga Malli Sadam and dahi brinjalAI Image
Published on

மாங்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் மாங்காய் வைத்து விதவிதமான ரெபிசிகளை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க. மேலும் இன்றைய கொத்தமல்லி மாங்காய் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான தாகி பிரிஞ்சால் செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அப்புறம் விடவே மாட்டீங்க..

கொத்தமல்லி மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

துருவிய மாங்காய் - அரை கப்

உதிரியாக வடித்த சாதம் - 1 கப்

கொத்தமல்லி - சிறிதளவு + சிறிதளவு

ப.மிளகாய் - 1 + 1

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

வேர்க்கடலை - 1 கைப்பிடி

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கு

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டை அம்மியில் கொரகொரப்பாக தட்டி வைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் நளபாகம்: கோடை ஸ்பெஷல் மாங்காய் சாதம் மற்றும் கசப்பில்லா பாகற்காய் சாதம்!
Manga Malli Sadam and dahi brinjal

இன்னொரு பாதி கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை போட்டு நன்றாக பொரிந்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ப.மிளகாய், கொரகொரப்பாக அரைத்த கொத்தமல்லி, இஞ்சி கலவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, துருவிய மாங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

அடுத்து உதிரியாக வடித்து வைத்த சாதத்தை சேர்த்து கிளறி 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வைக்கவும்.

கடைசியாக 1 டீஸ்பூன் நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் கமகமக்கும் கொத்தமல்லி மாங்காய் சாதம் ரெடி.

புளிப்பு சுவை அதிகம் விரும்புபவர்கள் மாங்காய் துருவலை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். வேர்க்கடலை பிடிக்காதவர்கள் முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளலாம்.

தாகி பிரிஞ்சால்

தேவையான பொருட்கள்;

கத்தரிக்காய் வறுக்க

பெரிய கத்தரிக்காய் - 2 அல்லது 3

தனி மிளகாய் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

தயிரில் சேர்க்க வேண்டிய பொருட்கள்;

தயிர் - 1 கப்

தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

கிரேவிக்கு

சீரகம் - கால் டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

ப.மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை;

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரை நன்றாக கட்டி இல்லாமல் அடித்து வைக்கவும்.

பின்னர் அதில், தயிரில் சேர்க்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். கத்தரிக்காயை வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு அகலமான தட்டில், கத்தரிக்காய் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து அதில் வெட்டி வைத்த கத்தரிக்காயை போட்டு மசாலா நன்றாக படும்படி பிரட்டி 10 நிமிட ஊற வைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த கத்தரிக்காயை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

பின்னர் அதே கடாயில் உள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, ப.மிளகாய், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர், அதில் தயிர் கலவையை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

அடுத்து அதில் வறுத்த வைத்த கத்தரிக்காயை சேர்த்து ஒன்றும் பாதியாக கத்தரிக்காயை உடைத்து விடவும்.

இதையும் படியுங்கள்:
சூப்பரான சுவையில் தாகி பிந்தி மற்றும் அப்பளக்கூட்டு செய்யலாம் வாங்க!
Manga Malli Sadam and dahi brinjal

கத்தரிக்காய் நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி திக்கான பதம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கவும்.

இப்போது சூப்பரான தாகி பிரிஞ்சால் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com