

பொதுவாக நாம் எலுமிச்சம்பழம் வாங்கி வந்து ஃபிரெஸ்சாக இருக்கும் என்று ஃபிர்ட்ஜில் வைத்து விடுவோம். ஆனால் அவை சில சமயங்களில் அதன் தோல் காய்ந்து போன மாதிரி கடினமாக இருக்கும் அதனால் சாறும் குறைவாகத்தான் கிடைக்கும். அதனை தவிர்த்து எலுமிச்சையை நீண்ட நாட்கள் சாறு குறையாமல் வைத்திருக்க 7 எளிய வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஃப்ரிட்ஜில் தண்ணீரில் வைத்து சேமிக்கவும்
பலர் எலுமிச்சையை நேராக காய்கறி டிராயில் போட்டு விடுகிறார்கள். ஆனால், தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் சாறுடன் இருக்கும். இது எலுமிச்சை உலராமல் காக்கும்; சில நாட்களில் காய்ந்து கடினமாகிவிடாமல் பல வாரங்கள் மென்மையாக இருக்கும்.
தோலில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவவும்
இது பழமையான ஆனால் பயனுள்ள சமையல் ட்ரிக். எலுமிச்சையின் மேல் மிக மெல்லிய தேங்காய் எண்ணெய் தடவினால் அதன் ஈரப்பதம் நீண்ட நேரம் பாதுகாக்கப்படும். மார்க்கெட்டில் மலிவாக கிடைக்கும் போது அதிகமாக வாங்கி வைத்திருக்க இது உதவும்.
வெட்டிய எலுமிச்சையை திறந்தபடி வைக்க வேண்டாம்
அரை வெட்டிய எலுமிச்சை ஃப்ரிட்ஜில் மிகவும் விரைவாக உலரும். அதை தட்டில் திறந்தபடி வைக்காமல், நன்றாக மூடி அல்லது காற்று புகாத டப்பாவில் வெட்டிய பகுதி கீழாக வைத்து சேமிக்கவும். இது சாறு குன்றாமல் காக்கும்; மேலும் ஃப்ரிட்ஜ் வாசனையும் ஏறாது.
வெங்காயம், வாழைப்பழம் அருகில் வைக்காதீர்கள்
வாழைப்பழம், தக்காளி, வெங்காயம் போன்றவை வெளியிடும் வாயுக்கள் காரணமாக எலுமிச்சை விரைவில் கெட்டுப்போகும். அதனால், அவற்றிலிருந்து தனியாக எலுமிச்சையை வைத்தால் அதன் ஆயுள் அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முன் உருட்டவும்
எலுமிச்சை கொஞ்சம் கடினமாக இருந்தால் உடனே தூக்கி எறிய வேண்டாம். அதை மேசையின் மீது கைப்பத்தால் சில விநாடிகள் அழுத்தி உருட்டவும். இது உள்ளே இருக்கும் சாற்றை தளரச்செய்து அதிக சாறு பிழிய உதவும்.
அதிகமான சாற்றை ஐஸ் ட்ரேயில் உறையவைக்கவும்
எலுமிச்சை மிகவும் பழுத்துவிட்டால், சாறு பிழிந்து ஐஸ் க்யூப் ட்ரேயில் வைத்து ஃப்ரீசரில் சேமிக்கலாம். பிறகு லெமனேடு, கிரேவி, மரினேட் அல்லது கோடைக்கால பானங்களில் எளிதாக பயன்படுத்தலாம்.
மிகவும் மென்மையானவற்றை வாங்க வேண்டாம்
மென்மையான எலுமிச்சை அதிக சாறு கொண்டது என்று பலர் நினைப்பார்கள். ஆனால் மிக மென்மையானவை விரைவில் கெட்டுப்போகும். மார்க்கெட்டில் வாங்கும்போது சற்று உறுதியான, எடையுள்ள, மிருதுவான தோல் கொண்ட எலுமிச்சையை தேர்வு செய்யவும். அவை நீண்ட நாட்கள் பசுமையாகவும் சாறாகவும் இருக்கும்.