கறிவேப்பிலையை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவது எப்படி?

How to use curry leaves?
healthy tips...
Published on

ட்னியில் தாளித்துக் கொட்டுவது முதல் சாதத்தில் பிசைந்து உண்ண மணமுள்ள கறிவேப்பிலைப்பொடி தயார் செய்வதுவரை பலவகை உணவுகளும் கறிவேப்பிலை இன்றி மணம் பெறாது. உணவுகளுக்கு மணமூட்டுவது மட்டுமின்றி உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகளையும் தருவது கறிவேப்பிலை. கடைக்குப்போய் காய்கறி வாங்கும்போது கடைசியில் கொத்தாக கறிவேப்பிலையை உடைத்து பையில் திணிப்பார் கடைக்காரர். இவ்வாறு வரும் கறிவேப்பிலையை எவ்வாறு ஃபிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வாடாமல் பாதுகாப்பது என்பதற்கான 7 டிப்ஸ்களை இப்பதிவில் பார்க்கலாம்.

1. கறிவேப்பிலை இலைகளை உருவி எடுத்து ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, ஈரப்பதம், மற்ற உணவுப் பொருள்களின் வாசனை மற்றும் கிருமிகள் உட்புகாதபடி டப்பாவின் மூடியை இறுக மூடி ஃபிரிட்ஜுக்குள் வைக்கவும்.

2. இலைகளை ஸ்டோர் பண்ணுவதற்கு முன் கழுவவேண்டாம். தேவைப்படும்போது எடுத்து கழுவி உபயோகிக்கவும். இவ்வாறு செய்வதால் அவை நீண்ட நாள் பசுமையாக இருக்கும்.

3. கறிவேப்பிலையின் சுவையை விரும்புபவர்கள் அதை அரைத்துப் பேஸ்ட்டாக்கி ஃபிரிட்ஜின் ஃபிரீசருக்குள் வைத்து நீண்ட நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

4. ஸ்டோர் பண்ணுவதற்கு முன் இலைகளை கழுவ விரும்பினால் அவைகளை கழுவி நிழலில் நன்கு காயவைத்துப் பின் ஈரப்பசை இல்லாமல் துடைத்து ஏர் டைட் கன்டைனரில் போட்டு மூடி ஃபிரிட்ஜுக்குள் வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
சமையலுக்கு ருசியைக் கூட்ட அட்டகாசமான சில டிப்ஸ்கள்!
How to use curry leaves?

5. கறிவேப்பிலை இலைகளை டிஸ்யூக்களில் சுற்றி கன்டைனரில் வைக்கலாம். இதனால் சிறிதளவு ஈரப்பசை இருந்தாலும் அதை டிஸ்யூ உறிஞ்சிவிடும். இலைகள் பல நாட்கள் வரை புதிதாகவே இருக்கும்.

6. இலைகளை ஃபிரிட்ஜுக்குள் வைக்காமல் நேரடியாக ஃபிரீசருக்குள் வைத்தும் பாதுகாக்கலாம். உபயோகிக்கும் போது தேவையான இலைகளை முன்னதாக வெளியே எடுத்து வைத்து டீஃபிராஸ்ட்  (defrost) பண்ணுவது அவசியம்.

7. இலைகளை உபயோகிக்க எடுக்கும்போது சுத்தமான உலர்ந்த ஸ்பூனைக் கொண்டு எடுப்பது நலம். கைகளால் எடுத்தால் மற்ற இலைகள் மாசடைய வாய்ப்பு உண்டாகும். மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி தினமும் கறிவேப்பிலையுடன் சமையலை செய்து முடிங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com