
பெரும்பாலும் கீரைகளை சமையல் செய்யும்போது பச்சை மிளகாய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய் புளி அதிகம் சேர்க்கக்கூடாது.
எண்ணெயில் பொறித்து சாப்பிடுவதைவிட பருப்பு கூட்டாகவும் சாதம் கடைந்து நீரில் வேகவைத்து கடைந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
கீரைகளை அறிந்து அதிக நேரம் வைத்திருந்து சமையல் செய்யக்கூடாது.அதிக நேரம் காற்றில் இருக்கும்போது அதனுடனான உயிர் சத்துக்கள் நீங்கி சுவையும் குறைந்துவிடும்.
கீரைகளை சமையல் செய்த பின் பிரிட்ஜில் வைக்க கூடாது .
சமைக்கப்படுகின்ற கீரை புதிதாக இருக்க வேண்டும் வாடி வதங்கி கீரையாக இருக்கக் கூடாது.
கீரைகளில் உப்புச் சத்துக்களும் உலோக சத்துக்களும் இருப்பதால் கீரையை வேகவைத்த நீரில் அடியில் நிற்கும் இந்த நீரை வெறும் நீர் என்று கீழே கொட்டி விடக்கூடாது அதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் அப்பொழுதுதான் கீரையின் முழு சத்துக்களும் கிடைக்கும்.
ஆஸ்துமா நோயாளிகள் வெந்தயக்கீரை மணத்தக்காளி கீரை முளைக்கீரை பசலைக்கீரை உண்ணக்கூடாது. கருவேப்பிலை புதினா தூதுவளை முசுமுசுக்கை கற்பூரவல்லி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
நரம்புத் தளர்ச்சி மற்றும் மகப்பேறு இல்லாதவர்கள் முருங்கைக்கீரை, அரைக்கீரை தூதுவளை ஆகியவற்றை உணவு சேர்த்துக் கொள்ளலாம்.
இதய நோயாளியாக உள்ளவர்கள் முருங்கைக்கீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம். அகத்திக் கீரையை பயன்படுத்தலாம்.
வெந்தயக்கீரை மணத்தக்காளி கீரை முளைக்கீரை பசலை கீரை கீழாநெல்லிக்கீரை கரிசலாங்கண்ணிக் கீரை சக்கரவர்த்தி கீரை வல்லாரைக் கீரை ஆராக்கீரை அகத்திக்கீரை இவற்றை கோடை கலங்களில் பயன்படுத்துவது நல்லது.
தூதுவளை புதினா முசுமுசுக்கை அரைக்கீரை மூக்கிரட்டை கற்பூரவள்ளி சுக்காங் கீரை இவற்றை குளிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும்.
முருங்கைக்கீரை அரைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை வல்லாரை கீரை மற்றும் புளிச்ச கீரை ஆகியவற்றை எல்லா காலங்களிலும் சாப்பிட்டு வரலாம்.
அரைக்கீரையினை இளசான இலையாக பூச்சி இல்லாமல் ஆய்ந்து கொள்ள வேண்டும். முளைக்கீரையினை தண்டு இளசாக இருந்தால் தண்டுடன் கிள்ள வேண்டும் முற்றலாக இருந்தால் இலையாக கிள்ளிக்கொள்ள வேண்டும் முற்றிய தண்டனை பொடியாக நறுக்கி கூட்டு வைக்க . பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிறு கீரையினை இளசாக இருந்தால் தண்டுடன் பொடியாக நறுக்கி பயன்படுத்தலாம்.
முருங்கைக் கீரையினைத் தனித்தனியாக காம்பு நரம்பு இல்லாமல் ஆய்ந்து கொள்ள வேண்டும்.
வெந்தயக்கீரை வேர் பகுதியினை சிறிது நறுக்கிவிட்டு அப்படியே பொடியாக நறுக்கி உபயோகிக்க வேண்டியதுதான்.
கீரைத்தண்டு இளசான கீரையாக ஆய்ந்து பொடியாக நறுக்கி பொரியல் கூட்டிற்கு பயன்படுத்தலாம்.
தண்டினை நாரெடுத்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
எல்லா கீரைகளிலும் பூச்சிகள் இல்லாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து இரண்டு முறைக்கு மேலாக அலசி வடிகட்டும் கூடையில் போட்டு வடிகட்ட வேண்டும்.
கீரை வகைகளை குக்கரில் வேகவைத்தால் பசுமை நிறம் மாறி பழுப்பு நிறமாக மாறிவிடும்.
எல்லா கீரை வகைகளையும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தண்ணீர் விட்டு வேகவைத்தால் பசுமை மற்றும் ருசியாக இருக்கும்.
கீரைகளை சமைத்து இறுதியில் தாளிக்க வேண்டும் கடுகு உளுத்தம் பருப்பு சீரகம், மிளகாய்வற்றல் பெருங்காயம் சேர்த்து தாளித்தால் மணமாகவும் ருசியாவும் இருக்கும்.
கீரை வேகும்போது தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்து சூப் செய்யலாம்.
பொதுவாக எல்லா கீரை சமையலுக்கும் தேங்காய் துருவல் சேர்த்து சமைத்தால் ருசியா இருக்கும்.
கீரை மசியலை கடையும்போது கற்சட்டியில் மரமத்தால் கடைந்தால் ருசியாக இருக்கும் மிக்ஸியில் கடைந்தால் ருசி மாறிவிடும்.
கீரையை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் வேலைக்கு செல்பவர்களுக்கு காலையில் கீரை சுத்தம் செய்வது கடினமாக இருந்தால் இரவிலேயே ஆய்ந்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
கீரை உணவுகளை எக்காரணம் கொண்டு இரவில் சாப்பிடக்கூடாது.