இந்த நாட்டில் பானிபூரியின் விலை 1089 ரூபாயாம்... அப்போ மற்ற நாடுகளில்?

Pani puri
Pani puri
Published on

பானிபூரி என்றால் சிறு குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பானிப்பூரியின் விலை, வெளிநாடுகளில் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்யும் இடத்தில், அந்தப் பொருளின் விலை சற்று குறைவாகவே இருக்கும். அதேபோல்தான் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பானிபூரியின் விலையும் குறைவுதான். குறைவென்றால், 10 ரூபாயிலிருந்து ரூ50 வரையில் கூட இருக்கும். இந்தியாவின் முக்கால்வாசி மக்கள் அந்த 10ரூபாய் பானிபூரியையே சாப்பிடுவார்கள். அதுவும் நமது நாட்டில் வகைவகையாக பானிபூரி இருக்கும்.

தற்போது பெரிய பானிபூரி கூட விற்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக வட மாநிலங்களில் பானிபூரி மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில், வடமாநிலம்தானே பானிபூரியின் பிறப்பிடம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தென்மாநிலங்களில் வந்து இப்போது, அனைவராலும் ஈர்க்கப்பட்டுவிட்டது. பானிபூரி சாப்பிடாத ஆட்களையும், விற்காத இடங்களையும் இப்போது பார்க்கவே முடியவில்லை. சமீபத்தில்கூட உலகளவில் ஒரு குக்கிங் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண், பானிபூரி செய்தார். அதனை சாப்பிட்ட வெளிநாட்டு நடுவர்கள் ஆகா! ஓகோ! என்று பாராட்டினார்கள்.

விலை குறைவாகவும், மன திருப்தியாகவும் இருக்கும் ஒரு உணவு பானிபூரி. ஆனால், சமீபத்தில் ஒரு ஆராய்ச்சியில் இந்த பானிபூரி புற்றுநோயை உண்டாக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இது உண்மையா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை.

சரி! இப்போது சில வெளிநாடுகளில் விற்கப்படும் பானிபூரிகளின் விலையைப் பற்றிப் பார்ப்போம்.

லண்டன்:

இந்த நாட்டில் 6 பானிபூரி 3.5 டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ300.

சீனா:

சீனாவில் 6 பானிபூரியின் விலை 4 டாலராகும். அதாவது 350 ரூபாயாகும்.

கனடா:

கனடாவில் 6 பானிபூரி 5 டாலராகும். இந்திய மதிப்பில் ரூ450 ஆகும்.

ஜப்பான்:

ஜப்பான் நாட்டில் 6 சிறிய அளவு பானிபூரியின் விலை 6 டாலர். அதாவது ரூ520 ஆகும்.

அமெரிக்கா:

அமெரிக்காவில் 7 பானிபூரியின் விலை 7 டாலர். அதாவது ரூ600.

இதையும் படியுங்கள்:
முட்டை எத்தனை வகை? இதை சைவ கணக்கில் கொண்டு வந்த ஆண்டு!
Pani puri

ஃப்ரான்ஸ்:

ஃப்ரான்ஸில் 8 பானிபூரியின் விலை 14 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ1089 ஆகும்.

இந்தியா:

நமது நாட்டில் 6 பானிபூரி ரூ10 முதல் 50 ரூபாயாகும். டாலர் கணக்கில் பார்த்தால், 0.2 டாலர்.

இந்த நாடுகளில் அதிகம் பானிபூரி சாப்பிடப்படும் ஒரே நாடு இந்தியாதான். இனி வெளிநாடுகளில் பானிபூரி வாங்கி சாப்பிடும்போது, விலைக்கேற்ற ருசி இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com